• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-01 10:00:56    
கியூபா தூதர் கார்லோஸ் மிகுவல் பெரிராவின் பேட்டி 1

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, சீனாவிலுள்ள கியூப தூதர் பெரிரா எமது செய்தியாளரிடம் விளையாட்டு எழுச்சி மிகுந்த கியூபாவைப் பற்றி விவரித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள, கியூபா, சுமார் 350 பேர் அடங்கிய பிரதிநிதிக்குழுவை அனுப்பும். தற்போது, கியூபாவின் 150 விளையாட்டு வீரர்கள் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் போட்டியிடும் தகுதியைப் பெற்றுள்ளனர். பேஸ்பால், மகளிர் கைப்பந்து, குத்துச் சண்டை உள்ளிட்ட போட்டிகளில் கியூபா ஆற்றல் பெற்றுள்ளது. குறிப்பாக, 110 மீட்டர் தடைத் தாண்டும் ஓட்ட போட்டியில், கியூபாவின்

புதிய வீரர் டைரோன் ரோபுலஸுக்கும், சீனாவின் புகழ்பெற்ற வீரர் லியு சியாங்கிற்கும் இடையிலான தலைச்சிறந்த போட்டியைக் கண்டுகளிக்க, கியூப மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கியூபா, தங்க பதக்கங்களைப் பெறும் வாய்ப்பு மிக அதிகம். உபசரிப்பு நாட்டின் இரசிகர்களின் ஆதரவில் சீன வீரர்கள் மேலும் அதிகமான சாதனைகள் படைக்க இருக்கின்ற போதிலும், சீனாவின் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடுவதையே, கியூப வீரர்கள் எதிர்ப்பார்கின்றனர். குறிப்பாக, 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்ட போட்டியில், டைரோன் ரோபுலஸுக்கும், லியு சியாங்கிற்கும் இடையிலான போட்டி, குறிப்பிடத்தக்கத்து என்றார் அவர்.

வளரும் நாடுகளில் விளையாட்டில் வல்லரசாக, கியூபா விளங்குகிறது. மாஸ்கோ மற்றும் பார்சிலோனா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பதக்க வரிசையில் முறையே, 4வது மற்றும் 5வது இடத்தைப் பெற்றது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், கியூபா, 9 தங்கப் பதக்கங்களுடன், பதக்க வரிசையில் 11வது இடம் பெற்றது. கடந்த 50 ஆண்டுகளில், கியூபா மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கைகளால், விளையாட்டு துறையின் வளர்ச்சி உள்ளிட்ட கியூப சமூக வாழ்க்கையின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டன. இது, இவ்வாறிருந்தாலும், அரசு, மக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் மாபெரும் முயற்சிகளும், ஆழமான விளையாட்டுப் பாரம்பரியமும், கியூபா இத்தகைய சாதனையைப் பெறுவதற்கு முக்கிய காரணங்களாகும். கியூப புரட்சி வெற்றி பெற்ற பின், அனைத்து மக்களும் கலந்துகொண்ட விளையாட்டு அமைப்பு முறை, உருவாக்கப்பட்டுள்ளது என்று, தூதர் பெரிரா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தமது நாட்டின் சார்ப்பாக, தமது உடன்பிறப்புகளின் ஆதரவுடன் போட்டியிடுவது மிகவும் பெருமை என்பதை, குழந்தை காலத்திலிருந்தே கற்றுக்கொண்டுள்ளோம். இந்த

பொறுப்பு நிறைந்த நிபந்தனையில், கியூபாவின் விளையாட்டு வீரர்கள், பொது மக்களின் மதிப்பு பெறுகின்றனர். மக்களின் ஊக்கம், அவர்கள் முன்னேறி, சாதனை படைப்பதற்கான தூண்டுதலாகும். இதற்காக, அவர்கள் தலைச்சிறந்த சாதனைகளை பெற விடாமுயற்சி செய்கின்றனர் என்றார் அவர்.
கியூபா, இசை மற்றும் சிக்கருக்கு மட்டும் புகழ்பெற்றதல்ல. விளையாட்டும், கியூப மக்களின் வாழ்வில் தலைச்சிறப்பு மிக்க துறையாகும். சீனாவிலுள்ள கியூப மக்கள், அடிக்கடி விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். பெய்ஜிங்கிலுள்ள தூதரகத்தின் பணியாளர்கள், சீனாவிலான கியூப மாணவர்கள், சீனாவில் வேலை செய்கின்ற கியூப மக்கள் ஆகியோர் அடிக்கடி ஒன்று கூடி, பேஸ்பால் விளையாடுகின்றனர். கியூபத் தூதரகத்தின் கைப்பந்து அணி, அண்மையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சர்வதேச தொடர்புத் துறை ஏற்பாடு செய்த போட்டியில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றுள்ளது.