• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-01 09:41:52    
Liu Jun Hua அம்மையார்

cri
Liu Jun Hua அம்மையார், பெய்சிங் பொது போக்குவரத்து குழுமத்தின் 718வது இலக்க பேருந்தின் நடத்துனர் ஆவார். 9 ஆண்டுகளுக்கு முன், அவர் இவ்வேலை வாய்ப்பைப் பெற்ற போது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ஏனெனில், அவரைப் பொறுத்த வரை, 5 ஆண்டுகால வேலையில்லாத நிலைமை முடிவுக்கு வந்தது. அவரது வாழ்க்கையில் புதிய நம்பிக்கை தோன்றியது.
Liu Jun Hua அம்மையாரின் குடும்பம் இன்பமாக வாழ்ந்து வந்தது. அவரது கணவர், அவர் மீது அன்பு செலுத்தினார். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ஆனால் 1994ஆம் ஆண்டு, அவர் பணி புரிந்த தொழிற்சாலை திவாலாகி விட்டது. அவர் வேலை இழந்தார். சில ஆண்டுகளுக்கு பின், அவரது கணவர் நோய்வாய்பட்டு காலமானார்.
தமது கணவனுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அனைத்து சேமிப்புத்தொகையையும் Liu Jun Hua அம்மையார் செலவிட்டார். அரசு வழங்கிய குறைந்த பட்ச வாழ்க்கை தர உத்தரவாதத்துக்கான திங்களுக்கு 300 யுவான் பணத்தொகையைக் கொண்டு, Liu Jun Huaஉம் அவரது மகனும் வாழ்க்கை நடத்தினர்.

"வாழ்க்கை நடத்தும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அஞ்சல் அட்டை, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்தேன்" என்றார், அவர்.
தாமும் மகனும் அமைதியாக வாழ்வதற்காக, நிரந்தரமான பணி பெறுவது Liu Jun Hua அம்மையாரின் மிக பெரிய விருப்பமாகும். 1999ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில், புதிதாக இயங்கும் 718வது இலக்க பேருந்துக்கு நடத்துனர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக Liu Jun Hua அம்மையார் எதேச்சையாகக் கேள்விபட்டார். அப்பணி வாய்ப்பைப் பெற அவர் முயன்றார். அவரே எதிர்பார்காதவாறு, மறு நாளே, அப்பணியை பெற்றார். அதுவே Liu Jun Hua அம்மையாரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக திகழ்ந்தது.
ஒரு திங்களுக்கு பின், ஆயிரத்துக்கு அதிகமான யுவான் ஊதியத்தைப் பெற்று, அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். Mcdonalds உணவகத்துக்கு தமது மகனை அவர் அழைத்து வந்தார். அவர் கூறியதாவது:
"எனது மற்றும் எனது குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்காக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்" என்றார், அவர்.
நன்றியுணர்வோடு, Liu Jun Hua அம்மையார் பணியில் மிகவும் பாடுபடுகின்றார். பயணிகளுக்கு சிறந்த பயணச்சூழலை உருவாக்கி கொடுக்கின்றார். நாள்தோறும் அரை மணி நேரத்திற்கு முன்கூட்டியே அவர் பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுகிறார். அவரே பேருந்தை துப்புரவு செய்து, மழைகாலத்தில் பயன்படுத்தக்கூடிய ஆடை அணிகள், பை மற்றும் போக்குவரத்து வரைபடம் ஆகியவற்றை கொண்டு வருகின்றார்.


718வது இலக்க பேருந்து புறப்படும் இடம், பெய்சிங் Chao Yang பிரதேசத்தின் Kang Jia Gou நிலையமாகும். சென்றடையும் இடம், Hai Dian பிரதேசத்தின் Yi He Shan Zhuang நிலையமாகும். 40 கிலோமீட்டர் தொலைவான இந்நெறியில், 40க்கு அதிகமான நிறுத்தங்கள் உள்ளன. ஓய்வு நேரத்தில், இந்த 40 நிறுத்தங்களுக்கு அருகில் உள்ள மருத்துவ மனைகள், நிறுவனங்கள், கடைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவை அமைந்துள்ள இடங்கள் பற்றி அறிந்து கொண்ட பின், பயணிகளுக்கு வசதி தரும் வகையில், அவர் வரைபடம் வரைத்தார். அதனை வரைவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியைப் பற்றி 718வது இலக்க பேருந்து பணியாளர்களின் அணித் தலைவர் Zhang Hong Jie கூறியதாவது:
"இந்த நெறியின் நெடுகில், மூன்று நான்கு முறை அவர் நடந்து சென்றிருக்கின்றார்" என்றார், அவர்.
718வது இலக்க பேருந்து தொடக்க இடத்திலிருந்து புறப்பட்டு, சென்றடையும் இடம் வரை, சுமார் 2 மணி நேரம் தேவைப்படுகிறது. போக்குவரத்து நெரிச்சல் ஏற்படும் போது, மூன்று மணி நேரம் தேவை. பேருந்தில் Liu Jun Hua அம்மையார் எப்போதும் சிரிப்புடன், ஒவ்வொரு நிறுத்தங்களின் பெயர்களை அறிவித்து, சீட்டுகளை விற்று, பேருந்தின் முழு ஒழுங்கையும் பேணிக்காக்கின்றார்.
718வது இலக்க பேருந்து நடத்துனர் Hao Qing செய்தியாளரிடம் பேட்டி அளிக்கையில், முதியோர், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர், சிறப்பு பயணிகள் என யாராக இருந்தாலும், பேருந்தில் ஏறிய பயணிகளுக்கு உதவி செய்ய Liu Jun Hua அம்மையார் தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாக கூறினார்.
பயணம் செய்யும் போது பயணிகள் தங்கள் வீட்டில் இருப்பது போன்ற சூழலை பயணிகளுக்கு உருவாக்க Liu Jun Hua விரும்புகின்றார்.
"எனக்கு இன்னல்கள் ஏற்பட்ட போது, மற்றவர்கள் எனக்கு ஆறுதல் தெரிவித்ததால், ஊக்கமடைந்தேன். நலிந்த மக்களுக்கு அதிக அன்பை காட்ட வேண்டும்"என்றார், அவர்.


Liu Jun Hua அம்மையாரின் அன்பை பயணிகள் உணர்ந்து கொண்டுள்ளனர். 718வது இலக்க பேருந்தில் வேலை செய்த ஓராண்டுக்கு பின், பெய்சிங்கில் பத்து தலைசிறந்த பேருந்து நடத்துனர்களில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு பிந்திய சில ஆண்டுகளில், அவருக்கு பல கெளரவ பட்டங்கள் சூட்டப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, நாட்டின் உழைப்பாளர் மாதிரியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூறியதாவது:
"பேருந்து போக்குவரத்து தொழில் நிறுவனம் எனக்கு இத்தகைய உயர் கொரவம் வழங்கியது. வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்கு மட்டுமே செவ்வனே வேலை செய்ய வேண்டாம். நாம் மேலதிக சேவை புரிய வேண்டும். பேருந்து மூலம் அளிக்கப்படும் சிறந்த சேவைகள், தொழில் நிறுவனங்கள், பயணிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்" என்றார், அவர்.
2004ஆம் ஆண்டின் அக்டோபர் திங்கள், Liu Jun Hua அம்மையார், அவரது இடைநிலை பள்ளி சகமாணவர் திரு Zhenஐத் திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின், அவரது கணவர், குழந்தையைப் பராமரித்து, வீட்டு வேலைகளை செய்யும் பொறுப்பு ஏற்கின்றார்.

கணவர் மற்றும் மகனின் பெரும் ஆதரவுடன், Liu Jun Hua அம்மையார் ஒவ்வொரு பயணியின் மீதும் கவனம் மற்றும் அன்பை செலுத்துகின்றார். தற்போது 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தீபம் ஏந்தும் பெருமை பெற்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட போக்கில், Liu Jun Hua அம்மையாரைப் போல், வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தீபம் ஏந்தியவர்கள் அதிகம். அவர்கள் பொதுவாக தனித்தன்மை வாய்ந்தவர்கள். சாதாரண வாழ்க்கையில், ஒலிம்பிக் எழுச்சியை அவர்கள் செயல்படுத்துகின்றனர். அத்தோடு, பொது மக்களாக, ஒலிம்பிக் கெளரவத்தை அவர்கள் அனுபவிக்கின்றனர். Liu Jun Hua அம்மையாரைப் பொறுத்த வரை, வாழ்க்கை தான், அவரது போட்டிக் களமாகும். அவர் கூறியதாவது:
"இன்னல்களை எதிர்நோக்கும் போது, இன்னல்களால் துவண்டுபோக வேண்டாம். வலுவான உயிராற்றலை கொள்ள வேண்டும். வாழ்க்கையில், நான் வல்லுநராக இருக்கின்றேன்" என்றார், அவர்.