அனைத்து மக்களும் அனுபவிக்கும் ஒலிம்பிக்
cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உலகின் மக்கள் அனைவருக்கும் ஒலிம்பிக் இன்பத்தை கொண்டுவர வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஹுச்சின்தாவ் தெரிவித்துள்ளார். இன்று பெய்ஜிங்கில் சீனாவுக்கான வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நட்பு ஒற்றுமை அமைதி என்ற ஒலிம்பிக் எழுச்சியை பெரிதும் வெளிக்கொணர்வது வெற்றிகரமாக ஒலிம்பிக் நடத்துவதன் முக்கிய காரணியாகும். பல்வேறு நாட்டு வீரர்களுக்கு நியாயமாக போட்டியிடும் வாய்ப்பை வழங்க வேண்டும். போட்டி மணம், தரம் ஆகியவற்றை வீரர்களை போட்டிகளின் மூலம் வெளிக்காட்டச் செய்ய வேண்டும். ஐந்து கண்டங்களின் நண்பர்களை ஒலிம்பிக் மூலம் புரிந்துணர்வை வலுப்படுத்தி நட்பை ஆழமாக்க செய்ய வேண்டும் என்று ஹுச்சின்தாவ் தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் அரங்குகளும் திடல்களும் போன்ற மரபுச் செல்வங்களை சீனா மிகவும் மதித்துள்ளது. ஆனால் பெய்ஜிங் ஒலிம்பிக் சீனாவுக்கு விட்டுச் செல்லும் தார்மீக மரபுச் செல்வம் மேலும் மதிப்புக்குரியது. என்றுமே நிலையானது என்றார் ஹுச்சின்தாவ்
|
|