சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் கமிட்டியின் தலைவர் pal Schmitt இன்று விடியற்காலையில் பெய்ஜிங் வந்தடைந்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்திய போது, ஒலிம்பிக் விண்ணப்பம் செய்த போது அளித்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு வாக்குறுதியை சீனா நிறைவேற்ற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பொது மக்கள் கலந்துகொண்ட, அறிவியல் தொழில் நுட்பம் வாய்ந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த சீனா ஆயத்தம் செய்து வருகிறது. அதேவேளை தூய்மைக்கேடற்ற ஒலிம்பிக் நடத்தவும் சீனா ஆயத்தமாகியுள்ளது. பெய்ஜிங் காற்று தரம் தொடர்ந்து சீரடைந்துள்ளது. பெய்ஜிங் போன்ற இத்தகைய மாநகரம், உயர் வேகத்தில் வளர்ந்து வரும் போது, கழிவுப் பொருட்களை ஏற்படுத்தி, எரியாற்றல் மற்றும் நீரை கூடுதலாக செலவிடும். சீன நண்பர்கள் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நான் நம்புவதாக அவர் கூறினார்.
pal Schmitt, ஹங்கேரி ஒலிம்பிக் குழுத் தலைவர் ஆவார். ஹங்கேரி பிரதிநிதிக் குழு, 170 வீரர்கள் மற்றும் 80 பணியாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் 23 போட்டிகளில் கலந்துகொள்வர். பிரதிநிதிக் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் 3ம் நாள் காலையில் பெய்ஜிங் அடைவர்.
|