ஆகஸ்ட் 2ம் நாள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயல் குழு பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்தப் பணி பற்றிய, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் அறிக்கையை கேட்டறிந்தது.
உபசரிப்பு நாடான சீனாவின் தலைசிறந்த ஆயத்த பணி குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques rogge இக்கூட்டம் முடிந்த பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெகுவாக பாராட்டினார்.
பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஒலிம்பிக் அமைப்புக் குழுக்கள் மற்றும் சர்வதேச விளையாட்டுச் சங்கம் வழங்கிய அறிக்கைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயல் குழு பெற்றது. பெய்ஜிங் மாநகரத்தின் ஆயத்தப் பணி குறித்து, அவை மன நிறைவு தெரிவித்ததாக அவர் கூறினார்.
|