சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயல் குழு 2ம் நாள், பெய்ஜிங்கில் கூட்டம் நடத்தியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்தப் பணி பற்றிய, பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் அறிக்கையை இறுதி முறையில் இக்கமிட்டி கேட்டறிந்தது. பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் liuqi இக்குழுவின் சார்பில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கவனம் செலுத்தும் முக்கிய பிரச்சினைகளை விளக்கிக் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பெய்ஜிங் மாநகரத்தின் காற்று தரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், மாசுப் பொருட்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் பல்வகை நடவடிக்கைகளை பெய்ஜிங் மற்றும் சுற்றுப்புறப் பிரதேசங்கள் மேற்கொண்டு வருகின்றன. தவிர, விளையாட்டுப் போட்டியின் ஒருங்கிணைப்புக்கான பயன்மிக்க தலைமையக அமைப்புமுறையையும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு உருவாக்கி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் தொடர்புக் கொள்ளும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாதுகாப்புப் பணி ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது என்று அவர் தெரிவித்தார்.
பெய்ஜிங் மாநகரின் தலைசிறந்த ஆயத்தப் பணி குறித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெகுவாக உறுதிப்படுத்தியது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Jacques rogge நம்பிக்கை தெரிவித்தார்.
|