• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-04 18:48:18    
உலக மரபுச் செல்வம்

cri

சீனாவின் பல இயற்கை மற்றும் பண்பாட்டு மரபுச் செல்வங்கள், சீனாவின் பழங்காலப் பண்பாட்டு நாகரிகத்தின் முக்கிய பகுதிகளாகும். சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள shangdong மாநிலத்தின் tai மலை, மிகவும் பயபக்திக்கு பெயரெடுத்த புனித மலையாகும். 2000 ஆண்டுகால நிலப்பிரபுத்துவ சமூகத்தில், பேரரசர்கள் இம்மலையில் வழிபட்டனர். தவிர, சீனாவின் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களின் எழுச்சியின் ஊற்றுகண்ணும் இதுவேயாகும்.

 2000 ஆண்டுகளுக்கு முன்பு, சீன பெருஞ்சுவர் கட்டப்பட்டது. சீனாவின் வட பகுதியில், வளைந்து நெளிந்து நீண்டு அமைந்துள்ள இது, மனித குலத்தின் நாகரிக வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கட்டிடக் கலையை உணர்த்தும் திட்டப்பணியாகும். சீனாவின் தேசிய இன எழுச்சியின் முக்கிய சின்னம் இதுவே. சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள gansu மாநிலத்தில் நூற்றுக்கணக்கான dunhuang mogao கற்குகைகள் உள்ளன. 1000 ஆண்டுகாலத்திற்கு முன்பு கட்டியமைக்கப்பட்ட, கட்டிடம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வகை கலை வடிவங்கள், இங்கே காணப்படலாம். இது, தற்போதைய உலகில் மிகப் பெரிய மற்றும் நன்றாகப் பாதுகாகப்படும் புத்தக் கலை களஞ்சியமாக இருக்கிறது. அதனால்தான், சர்வதேச அளவில் புகழ் பெற்ற dunhuang இயல் உருவாக்கப்பட்டது.


சீனாவிலுள்ள உலகின் மரபுச் செல்வம் என்ற விளக்கத் திரைப்படத்தின் தயாரிப்பு மற்றும் ஒளிப்பரப்புதல் மூலம் பொது மக்கள் இதன் விளக்கங்களை கண்டு இரசிக்கலாம். அது மட்டுமல்ல, பொது மக்களைச் சேர்ந்த உலகின் மரபுச் செல்வங்களுக்கான பாதுகாப்பு உணர்வை தீவிரமாக்குவதே இவ்விளக்க திரைப்படத்தின் முக்கிய நோக்கமாகும்.

 


சீனாவின் தென் மேற்குப் பகுதியிலுள்ள dujiangyan-qingchengshan என்னும் உலக மரபுச் செல்வங்கள்,மே திங்கள் 12ம் நாள், வென்ச்சிவான் நிலநடுக்கத்தில் கடுமையாக சீர்குலைக்கப்பட்டன. எனவே, இவ்விளக்கத் திரைப்படத்தின் முதல் தொகுதியான dujiangyan-qingchengshanஐ, சீன மத்திய தொலைக்காட்சி நிலையம் 16ம் நாள் முதல் முறையாக ஒளிப்பரப்பியது.


நண்பர்களே, உலக மரபுச் செல்வம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.