• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-04 20:12:16    
பாகிஸ்தான் மற்றும் தென் கொரியாவின் விளையாட்டு வீரர்களின் ஆயத்தப் பணி

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நெருங்கி வருவதோடு, சாதனை பெறும் வகையில், இப்போட்டியில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் தடகள வீரர்கள் ஆக்கப்பூர்வமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

அப்துல் ரஷித், ஷாடாஃப் ஷிடிக்குய் இருவரும், பாகிஸ்தானின் சார்பில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பர் என்று ஜூன் திங்களின் பிற்பகுதியில், பாகிஸ்தான் விளையாட்டு ஒன்றியம் அறிவித்தது. தற்போது, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக அவர்கள் இஸ்லாமாபாத்தில் பயன்மிக்க ஆயத்தம் செய்து வந்தனர். பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை நடைபெற்ற ஜநா சதுக்கத்தில், விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளை தற்போது அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அப்துல் ரஷித், பாகிஸ்தான் ஆடவருக்கான 110 மீட்டர் தடையோட்டம் போட்டியின் சாதனையாளர் ஆவார். தெற்காசிய உள்ளரங்கு தடையோட்ட விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை வெள்ளி பதக்கங்களை அவர் பெற்றுள்ளார். இந்த முறை, சீனாவில் பயணம் மேற்கொள்வதில் அவர் அதிகமான எதிர்பார்ப்பு கொள்கிறார். சர்வதேச அளவில் முதலிடத்தை இது வரை பெற்றிராத போதிலும், அவர் இயன்ற அளவு அதற்காக முயற்சி செய்வர். நாள்தோறும், 3 அல்லது 4 மணிநேர பயிற்சி செய்து வருகிறார். அவர் கூறியதாவது:

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, முக்கியமான விளையாட்டு விழாவாகும். இதற்காக, 4 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் பயிற்சி செய்ய துவக்கினோம் என்றார் அவர்.

21 வயதான ஷாடாஃப் ஷிடிக்குய், பாகிஸ்தானின் சார்பில் நூறு மீட்டர் மகளிர் ஓட்டப் போட்டியில் கலந்துகொள்வர். இவர் பாகிஸ்தான் மகளிருக்கான இரு நூறு மீட்டர் ஓட்ட சாதனையாளர் ஆவார். தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் நூறு மீட்டர் ஓட்டத்திலும் நாநூறு மீட்டர் தொடரோட்டப் போட்டியிலும் வெண்கல பதக்கங்களை அவர் பெற்றுள்ளார். தவிர, ஆசிய சாம்பியன் பட்டப் போட்டி, இஸ்லாமிய மகளிருக்கான விளையாட்டுப் போட்டி ஆகியவற்றில் அவர் பங்கேற்றுள்ளார். அவரும் அவரின் பயிற்சியாளும் ஒலிம்பிக்கிற்காக தொடர்ந்து 6 திங்கள்காலம் பயிற்சி செய்துள்ளனர். நாள்தோறும், பயிற்சி செய்வதற்கு சுமார் 4 மணிநேரம் ஆனது. தற்போது, நடைபெற உள்ள பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி குறித்து, அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் கூறியதாவது:

நான் சீனாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த முறை, சீனாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது, எனது பெருமை. எனது கனவு நிறைவேறி வருவதால், நான் மிகவும் மகிழ்கின்றேன் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக சீனா செவ்வனே தயாராக இருக்கிறது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஆயத்தப் பணியை பற்றி பேசிய போது அவர்கள் தெரிவித்தனர். ஷாடாஃப ஷிடிக்குய் கூறியதாவது:

கடந்த 8 ஆண்டுகளாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த, சீனா பாடுபட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில், சீனாவில் ஒவ்வொரு நாளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறன. தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா நடத்தும் என்று பாகிஸ்தான் நம்புகிறது என்று அவர் கூறினார்.

நேயர்களே, இன்றைய பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களின் ஆயத்தப் பணி பற்றிய அறிமுகம் முடிந்தது. அடுத்து, தென் கொரியாவின் வீரர்களின் ஆயத்தப் பணி பற்றிய அறிமுகத்தை கேளுங்கள்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், தென் கொரிய பிரதிநிதிக் குழு சிறந்த சாதனைகளைப் பெற்று, நாட்டின் மக்களுக்கு பெருமையையும், கௌரவத்தையும் கொண்டு வர வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தென் கொரிய விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், தென் கொரிய விளையாட்டுச் சங்கத்தின் துணைத் தலைவருமான kinzhengxin இவ்வாறு தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், 10க்கு மேலான தங்கப் பதக்கங்களைப் பெற்று, ஜப்பானைத் தாண்டி, ஆசியாவில் இரண்டாவது இடத்தை வகிக்க வேண்டுமென்பது தென் கொரியாவின் குறிக்கோளாகும். அவர் கூறியதாவது:

அம்பு எய்தல், tae kwon do என்ற கால் சண்டை உள்ளிட்ட போட்டிகளில் நாங்கள் தனித்தனியாக இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற வேண்டுமென்று விரும்புகிறோம். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜப்பானைத் தாண்டி, ஆசியாவின் இரண்டாவது இடத்தை நாங்கள் வகிக்க வேண்டும் என்றார் அவர்.

சுமார் 380 பணியாளர்கள் கொண்ட தென் கொரிய விளையாட்டுப் பிரதிநிதிக் குழு, ஜூலை திங்கள் 25ம் நாள் உருவாக்கப்பட்டது. அது, ஆகஸ்ட் திங்கள் 1ம் நாள் பெய்ஜிங்கிற்கு வரும். ஒலிம்பிக் போட்டியின் சாதனைகள், ஒரு நாட்டின் தொழில் முறை விளையாட்டு நிலையை வெளிப்படுத்துகிறது. நாங்கள் சிறந்த சாதனைகளைப் பெற்றால்தான், தென் கொரிய மக்கள் விளையாட்டு மீது மிகுந்த கவனம் செலுத்துவர். இது பற்றி அவர் கூறியதாவது:

அண்டை நாடான சீனாவில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறுவது தென் கொரியாவுக்கு மிக முக்கியமானது. எமது விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் சாதனைகள் பெற்று, நாட்டுக்கு பெருமையையும் கௌவரத்தையும் கொண்டு வர வேண்டும் என தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

Kinzhengxing, ஒரு புகழ் பெற்ற யுடோ வீரர் ஆவார். தற்போது, கிழக்காசிய யுடோ சம்மேளனத்தின் தலைவர் பதவி வகிக்கிறார். தவிர, தென் கொரியாவில் புகழ் பெற்ற longren விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆவார். சீனாவில் பயணம் மேற்கொண்டு, Longren பல்கலைக்கழகத்துக்கும், சீனாவின் சில பல்கலைக்கழக்ங்களுக்குமிடையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை அவர் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்கிறார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு அவர் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசியாவில் நடைபெறுகின்ற மூன்றாவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். இப்போட்டியை நடத்திய பின், சர்வதேச அளவில் சீனாவின் தகுநிலை மேலும் உயரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.