• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-04 09:46:03    
கியூபா தூதர் கார்லோஸ் மிகுவல் பெரிராவின் பேட்டி 2

cri
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் கல்வி பயின்று, சரளமாக சீன மொழியை பேசுகின்ற தூதர் பெரிரா, சீனாவின் பண்பாடு மற்றும் கலைகளை நன்றாக புரிந்துகொண்டுள்ளார். திரைப்பட இயக்குநர் சாங் யீ மோ தயாரிப்பில், சிறப்பான பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க மற்றும் நிறைவு விழாக்களை கண்டுகளிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். துவக்க விழாவில் தான் எதிர்ப்பார்க்கும் கலை நிகழ்ச்சிகளை பற்றி, அவர் கூறியதாவது:

சீனாவின் ஐயாயிரம் ஆண்டுகால பண்பாட்டுப் பாரம்பரியம், 56 தேசிய இனங்களின் பண்பாடுகள் ஆகியவற்றைக் கண்டுகளிப்பதை எதிர்ப்பார்க்கின்றேன் என்றார் அவர்.
இதர நாடுகளை விட, சீனாவில் கியூபாவுக்கு சிறந்த முன்னுரிமை உண்டு. கியூபாவுக்கான சீன மக்களின் ஆழமான உணர்வு இதுவாகும். அழகான ஹவானா என்ற பாடல், சீனாவிலுள்ள முதியோர்கள் மற்றும் இளைஞர்களால், பெரிதும் வரவேற்கப்பட்டது. சீனாவின் புத்தகக்கடைகளில், கியூபா பற்றிய நூல்கள், ஒலி மற்றும் ஒளி நாடாக்கள் அதிகமாக கிடைக்கின்றன.
சீனாவுக்கும் கியூபாவுக்குமிடையில், நீண்டகால நட்புறவும் நம்பிக்கையும் உள்ளன. தற்போது, இரு நாட்டுறவு வரலாற்றில் மிக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டுப் பரிமாற்றம் பற்றி, இரு நாடுகள் உருவாக்கிய உடன்படிக்கையில்,

போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் தொடர்பு, விளையாட்டு மருத்துவச் சிகிச்சை, இளைஞர் பயிற்சி முதலியவை இடம்பெறுகின்றன. இதில், குத்துச் சண்டை விளையாட்டு பயிற்சி, முக்கிய உள்ளடக்கமாகும். தவிர, இரு நாடுகளும், பல விளையாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய பயிற்சி தளங்களை நிறுவும் உடன்படிக்கையை உருவாக்கியுள்ளன. பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு, கியூபா, அதிகமான வீரர்களை அனுப்புவது, இரு நாடுகளுக்கிடையிலான சீரான விளையாட்டு ஒத்துழைப்புறவை மேலும் ஆழமாக்கி, புதிய உறவுக்கான காலக்கட்டத்துக்கு விரைவுபடுத்தும் என்று அவர் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, நல்லதொரு வாய்ப்பு தான். இது, சீன-உலக தொடர்பை விரைவுபடுத்துவதோடு, சீனாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளில் பெய்ஜிங்கில் ஏற்பட்ட மாற்றங்களைப் பார்ப்பதில், தூதர் பெரிரா மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது:

ஒலிம்பிக்கை நடத்துவதால், சீன மக்கள் குறிப்பாக பெய்ஜிங் நகரவாசிகள், நம்பிக்கையையும் பெருமையையும் கொண்டுள்ளனர். அவர்கள் வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக்கொண்டு, செய்பாடுகளிலான விபரங்களில் கவனம் செலுத்தி, தொண்டராக வேலை செய்து, சுற்று சூழல் பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார் அவர்.
தற்போது சில மேலை நாடுகள், செய்தி ஊடகங்கள் மற்றும் அரசுசார நிறுவனங்கள், சீனாவுக்கு எதிரான இயக்கத்தை நடத்தி, ஒலிம்பிக்கிற்கான சீனாவின் முயற்சிகளை இழிவுபடுத்த முயல்கின்றன. ஆனால், அனைத்து சீன மக்களும் ஒற்றுமையோடு, உள்ளனர். சர்வதேசத்தில் புகழ்பெற்ற பெரிய நாடான சீனா, வளரும் நாடுகளின் சார்ப்பில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில், தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக, தூதர் பெரிரா தெரிவித்தார்.