• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-04 21:40:08    
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முழு அமர்வு

cri
ஆக்ஸ்ட் 4ம் நாளிரவு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 120வது முழு அமர்வு பெய்ஜிங்கில் தொடங்கியது. சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

சீன அரசும், மக்களும் உறுதிமொழிகளை முறையாக நடைமுறைப்படுத்தி, மிக பெரிய உற்சாகத்துடன், இயன்ற அனைத்து திறன்களையும் பயன்படுத்தி, சிறப்பு மிக்க, உயர்வான நிலை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவோம் என்று ஹூசிந்தாவ் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் மூலம், சர்வதேச ஒலிம்பிக்கின் வளர்ச்சியை முன்னேற்றி, ஒலிம்பிக் எழுச்சியை வெளிக்கொணர வேண்டுமென அவர் விருப்பம் தெரிவித்தார். சீன மக்கள், உலக மக்களுடன் இணைந்த சாதனைகளை அனுபவித்து, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக, விளையாட்டு, சீன மக்களுக்கும் உலக மக்களுக்குமிடை, நட்புறவை மேம்படுத்தும் முக்கிய பாலமாக மாறியுள்ளது என்றும் ஹூசிந்தாவ் தெரிவித்தார்.

உற்சாகமான விருந்தோம்பல் மிக்க மனப்பான்மையுடன் சீன மக்களுக்கும், பெய்ஜிங் ஒலிம்பிக்கான சீனாவின் மாபெரும் முயற்சிக்கும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் Jacque rogge நன்றி தெரிவித்தார்.