ஆகஸ்ட் 5ம் நாள் முற்பகல், தென்மேற்குச் சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தின் தலைநகர் ச்செங் தூ நகரில், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நடைபெற்றது. இது, சி ச்சுவான் மாநிலத்திலான தீபத் தொடரோட்டத்தின் கடைசி இடமாகும்.
காலை 8:10 மணிக்கு, ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் துவக்க விழா நடைபெற்றது. 315 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன் மொத்த நீளம், 13.02 கிலோமீட்டராகும்.
ஆகஸ்ட் 6 முதல் 8ம் நாள் வரை, ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் பெய்ஜிங் மாநகரில் நடைபெறும்.
|