• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-05 14:36:06    
தா சுயே கோயில் (அ)

cri

தா சுயே கோயில், பெய்ஜிங் மாநகரின் ஹாய் தியன் பிரதேசத்தின் மேற்குப் பகுதியிலுள்ள யாங் தாய் மலையில் உள்ளது. அது, 1068ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டு இது வரை, சுமார் ஆயிரம் ஆண்டுகளாகியுள்ளன. முன்பு, அது, ச்சிங் ஷுய் கோயில் என அழைக்கப்பட்டது. 1428ம் ஆண்டு, அது செவ்னிடப்பட்டது. அப்போது, தா சுயே கோயில் என்ற பெயரில் அழைக்கப்படத் துவங்கியது.

இந்தக் கோயில், கிழக்கு நோக்கியதாக, மேற்கில் அமைந்துள்ளது. அதன் மையப் பகுதியில், முக்கிய வாயில், தேவர் மண்டபம், பெரிய மண்டபம், வூ லியங் ஷோ தேவர் மண்டபம், dragon மன்னர் கோயில் முதலிய கட்டிடங்கள் இருக்கின்றன.

இக்கோயிலின் மிக உயரான திருமறை வைக்கப்படும் மாளிகையின் முற்றத்தில், மறைந்த சியா லிங் துறவியின் புத்த தூபி இருக்கிறது. அது, 1747ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. அதன் உயரம், 10 மீட்டருக்கு மேலாகும். அது, பெய்ஜிங் மாநகரின் பெய் ஹாய் பூங்காவிலுள்ள வெள்ளை நிற கோபுரத்தின் வடிவத்தை ஓத்தது. அது, சிங் வம்சக்கால செதுக்கும் கலை நடையைக் காட்டுகிறது.

இக்கோபுரத்தைச் சுற்றி, தேவதாரு மரங்களும் cypress மரங்களும் இருக்கின்றன. அதற்குப் பின், வெள்ளை கற்களால் கட்டியமைக்கப்பட்ட குளம் இருக்கிறது. ஊற்று நீர், குளத்தின் அடியிலிருந்து பாய்ந்து, செங்கோன வடிவத்தில், நீல வண்ண ஏரியாக காட்சியளிக்கிறது. இவ்வேரி, லிங் நீரூற்று என அழைக்கப்படுகிறது. அதன் ஊற்று நீர், குளிர்ச்சியாக இருக்கிறது. கோடைக் காலத்திலும், அதன் நீரை கையில் எடுத்தால், குளிர்ச்சியை உணர்ந்து கொள்ளலாம். அதற்கு அருகில், இரட்டை மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் இருக்கிறது. அது, dragon மன்னர் கோயில் என அழைக்கப்படுகிறது. இவ்வூற்று நீர், dragon மன்னரால் வழங்கப்பட்டது என்ற கதை பழங்காலத்தில் பரவியது. அதனால், அவர்கள், dragon மன்னரை வணங்கும் வகையில் இந்த கோயில் கட்டியமைக்கப்பட்டது.