• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-05 18:44:49    
சீனாவின் புல்வெளி பாதுகாப்பதில் ஈடுபடும் ஆஸ்திரேலிய நிபுணர் ஒருவர்

cri

நீலமான ஆகாயம், பரந்த அளவிலான புல்வெளி, சுதந்திரமாக ஓடும் ஆடு மாடுகள், ஆகியவை வடமேற்கு சீனாவின் அழகான காட்சியை உருவாக்குகின்றன. மிக அதிக ஆயர்களும் விவசாயிகளும் இந்த பகுதியில் வாழ்கின்றனர். ஆனால், ஓரே மாதிரியான உற்பத்தி வடிவம், அதிகமான கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றால் புல்வெளியை அளவுக்கு மீறி சார்ந்திருப்பதோடு, உள்ளூர் உயிரின வாழ்க்கை தொகுதிக்கு ஓரளவு பாதிப்பையும் ஏற்படு்த்தியுள்ளனர். மேய்ச்சல் நிலத்தின் நிலப்பரப்பு குறைதல், மண் அரிப்பு முதலிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக சீன அரசு பலவித புல்வெளி உயிரின வாழ்க்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சில சர்வதேச அமைப்புகளும், நிபுணர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லண்டர் ஜுன்ஸ், மேய்ச்சல் நில வளர்ச்சியை ஆராயும் நிபுணராவார். சீன-ஆஸ்திரேலிய வேளாண் ஒத்துழைப்பு திட்டப்பணியில் பங்கெடுக்கும் நிபுணர்களில் ஒருவரான அவர், 2005ம் ஆண்டு சீனாவுக்கு வந்தார். வடமேற்கு சீனப் பகுதியில் மேய்ச்சல் விலத்தின் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதில் அவர் ஈடுபட்டு வருகின்றார். கான் சு மாநிலம் சென்றடைந்த போது, வடமேற்கு சீனாவின் அற்புத நிலம், தனிச்சிறப்புடைய நடையுடை பாவனைகள் ஆகியவை அவரை ஆழமாக கவர்ந்துள்ளன. அவர் கூறியதாவது

இங்கே வந்து சேர்ந்த பின், உள்ளூர் சூழ்நிலை என்னை மிகவும் கவர்ந்தது. சீனா பற்றிய அறிவு அதிகரிப்பதுடன், பொது மக்களின் நலன் மீது மென்மேலும் கவனம் செலுத்தி வருகின்றேன். இங்குள்ள மக்கள் நட்பாக பழகுகின்றனர். இயன்ற அளவில் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க உதவ விரும்புகின்றேன். ஆரம்பக் காலத்தில், ஆய்வு நோக்கிற்காக வந்தேன். ஆனால், இப்போது, உள்ளூர் மக்களின் நடைமுறை பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி நினைக்கின்றேன் என்றார் அவர்.

ஜுனஸின் மேய்ச்சல் நிலத்தின் ஆய்வு குழுவில் பல சீன அறிவியலாளர்கள் உள்ளனர். இவ்வாறு பலர் உள்ளடங்கி இருப்பது நியாயமானது என்று அவர் கருதுகின்றார். அவர் கூறியதாவது

எமது அறிவியல் ஆய்வு குழுவில் ஆஸ்திரேலிய மற்றும் சீன அறிவியலாளர்கள் இடம்பெறுகின்றனர். வெவ்வேறான ஆய்வு துறைகளில் ஈடுபடுகின்றோம். உயிரின வாழ்க்கையியல் வல்லுனர்கள், கால்நடை வளர்ப்பியல் நிபுணர்கள், புல்வெளி ஆய்வாளர்கள் எங்களிடையில் அடக்கம். நான் ஒரு பொருளியலாளர். இது எமது குழுவின் தனிச்சிறப்பு. புல்வெளியில் கால்நடை வளர்ப்பு உற்பத்தி தொகுதியை ஒட்டுமொத்தமாக அறிந்து கொண்டு ஆய்வு மேற்கொள்வது எமது பணியாகும். புல்வெளி அல்லது கால்நடை வளர்ப்பு பற்றி தனித்தனியாகவும் எளிதாகவும் ஆய்வு மேற்கொள்வது அல்ல. இந்தப் பன்னோக்க ஆய்வு வழிமுறை சீனாவுக்கு நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன் என்றார் அவர்.

தன்னுடைய மேம்பாடுடைய கணினி தொழில் நுட்பம் மூலம், சீனச் சகப் பணியாளர்களின் நடைமுறை அனுபவங்களை இணைத்து, மேற்கு சீனாவிலுள்ள புல்வெளி உயிரின வாழ்க்கை தொகுதியின் மீது ஒட்டுமொத்தமாக பரிசோதனை செய்து, நடைமுறை நிலைமைக்கேற்ற தொடரவல்ல வளர்ச்சி திட்டத்தை வகுப்பது தனது பணியாகும் என்று ஜுன்ஸ் கூறினார். அவருடைய முயற்சியும் குழுவில் அவர் ஆற்றுகின்ற பங்கும் சீனச் சகப் பணியாளர்களின் பாராட்டை பெற்றன. இத்திட்டப்பணியின் சீன ஒத்துழைப்பு தரப்பில் உள்ள கான் சு மாநில வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் WU JIAN PING கூறியதாவது

லண்டர் ஜுன்ஸ் இத்திட்டப்பணியில் பங்கெடுக்கின்றார். பொருளியலாளர் என்ற பார்வையில், கணினி தொழில் நுட்பம் மூலம், எமது உற்பத்தி தொகுதியை ஆராய்ந்தார். கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நிலம் புல்வெளி ஆகிய துறைகளிலான நிபுணர்கள் இதன் அடிப்படையில், முழு புல்வெளி உற்பத்தி தொகுதியை ஒட்டுமொத்தமாக அறிந்து கொண்டனர். இத்தொகுதியின் சிக்கலான அமைவு முழுவதையும் இனம் கண்டால் தான், உற்பத்தியை வளர்ப்பதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, பண்பாட்டுக்கு மதிப்பு அளிக்கும் வெற்றிக்கரமான தொழில் நுட்ப நடவடிக்கை திட்டத்தை இறுதியில் வகுக்கலாம். மேற்கு பகுதியிலான பலவீனமான உயிரின வாழ்க்கை சூழலும் பாதுகாக்கப்படலாம் என்றார் அவர்.