வாணி -- இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் தங்களுக்கு இன்னொரு சுவையான சீன உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். க்ளீட்டஸ் –சீனப் பண்பாடுகளில் சீன உணவு வகைகள் சிறப்பான இடம் வகிக்கின்றன. வாணி, இன்று நாம் எந்த வகை உணவு பற்றி கூறுகின்றோம்? வாணி – சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் தனிச்சிறப்புமிக்க உணவு வகைகள் உள்ளன என்று முந்தைய நிகழ்ச்சியில் கூறியுள்ளோம். இன்று வடமேற்கு சீனாவில் ஒரு சாதாரண உணவு வகையின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். க்ளீட்டஸ் – ஓ. வடமேற்கு சீன மக்களுக்கு ஆட்டிறைச்சி சாப்பிடும் வழக்கம் உண்டு. இன்றைய உணவு வகையில் ஆட்டிறைச்சி இடம்பெறுகிறதா?
வாணி – சரியாகச்சென்னீர்கள். இன்று ஆட்டிறைச்சி கலந்த பட்டாணியின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். அதன் பெயர் yang rou men fan. க்ளீட்டஸ் – தேவையான பொருட்களை முதலில் தெரிவியுங்கள்.
வாணி – இதோ பாருங்கள். ஆட்டிறைச்சி 200 கிராம் கேரட் 1 காளாண் 50 கிராம் வெங்காயம் 1 பச்சை மிளகாய் 1 சோயா சாஸ் 5 கிராம் சமையல் மது போதிய அளவு சமையல் எண்ணெய் போதிய அளவு உப்பு போதிய அளவு அரிசி 100 கிராம் ஜீரகம் சிறிதளவு சுவை பொருள் சிறிதளவு
வாணி – முதலில், ஆட்டிறைச்சியை நீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, அதனை துண்டு துண்டுகளாக வெட்டிட்டு வையுங்கள். சோயா சாஸ், சமையல் மது ஆகியவற்றுடன் ஆட்டிறைச்சி துண்டுகளை நன்றாக பிசைக்கவும்.
|