• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-05 16:21:05    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை:உங்கள் எண்ணக் குவியலின் வண்ணத்தொகுப்பான நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து எங்களுக்கு அன்பும் ஆதரவும் காட்டி ஊக்கமூட்டி வரும் நல்லுள்ளங்களுக்கு எமது நன்றிகள். ..........முதலில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் முன்னேறிய நேயர் மற்றும் முன்னேறிய பணியாளர் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஜுன் 21ம் நாஷ் ஒலிபரப்பப்பட்ட பின் பல நேயர்கள் ஊக்கமளித்து பாராட்டை தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து மணமேடு எம் தேவராஜா மற்றும் கோவை மாவட்ட தெபொன்முடி தே னா மனிகந்தனின் கருத்தை கேளுங்கள்.


......ஊத்தங்கரை கவி செங்குட்டுவன்...... 28.01.2008 - ல் இடம் பெற்ற செய்தி கேட்டேன். அதில் இடம் பெற்ற சீனாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கடும் பனிச்சீற்றம் பற்றியும் அதற்கு இன்று வரையில் 7கோடியே 78இலட்சத்து 60ஆயிரம் சீன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.என்றும் மேலும் 24 பேர் இதில் உயிரிழந்துள்ளனர் என்றும் அறியும் போது மிக்க மனவருத்தமே ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் சுமார் 3 இலட்சத்து 50ஆயிரத்துக்கு மேலான மக்களுக்கு அவசரமாக உரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்ற செய்தி சற்று ஆறுதலைத் தருகிறது.

….விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்…. இந்திய அரசு வழங்கும் பத்மபூஷன் விருது பெற்ற ஜியாலின், சீனாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவருக்கு எங்களின் பாராட்டுக்கள். 24.1.2008 அன்று அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் தமிழன்பன் வழங்கிய காப்புரிமை பற்றிய செய்திகள், மேலாதிக்க நாடுகளின் வஞ்சகத் தன்மையை வெளிப்படுத்தியது. இந்த காப்புரிமை மட்டில் வளரும் நாடுகள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால்தான் அந்தந்த நாட்டின் கண்டுபிடிப்பு உரிமை, முறை வழிகாட்டி உரிமையில் உரிமை கொண்டாடலாம். இல்லை என்றால் மேலாதிக்க நாடுகள் வளர விடாது. மேலாதிக்க நாடுகள் தற்போது ஆயுத பலம் கொண்டுதான் வளரும் நாடுகளை மிரட்டுவது அல்ல, காப்பு உரிமை போன்ற வஞ்சகச் செயல்கள் மூலமும் மிரட்டி வருவது தெரிகிறது. காப்புரிமை தனிமனிதனுக்கும் உண்டு. ஒரு நாட்டிற்கும் உண்டு என்பதை இன்றைய நிகழ்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. வழங்கியமைக்கு நன்றிகள் பல.

 ……மதுரை-20 அமுதாராணி…… ஒரு கோடியே 80லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாநகரமான சாங்காய் கடந்த சில ஆண்டுகளாக நகரவாழ் மக்களின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்து 2010ஆண்டு உலக பொருட்காட்சிக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கவுள்ளது என்பதை அறிவதில் மகிழ்ச்சி.

……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்…… அன்புடையீர், வணக்கம். ஜனவரி திங்கள் 30 ஆம் நாள் இடம்பெற்ற முதலாவது •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் தற்போதைய கடும் பனிப்பொழிவினால் சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் இன்னல் நிலைமை பற்றியும், அவற்றுக்கான சீன அரசின் நிவாரணப் பணிகள் பற்றியும் விரிவான முறையில் அறிந்து கொண்டேன். குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் துயர் துடைக்க களத்தில் நேரடியாக இறங்கியிருக்கும் சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்களை வெகுவாகப் பாராட்டுகின்றேன். குறிப்பாக, சீன வானொலி இணையம் மூலமாக, தொடர்வண்டி நிலையம் மற்றும் பயணம் செய்யும் விரைவுப் பேருந்து ஆகியவற்றில் சீனத் தலைமை அமைச்சர் மக்களின் நலனை விசாரிக்கும் நிழற்படங்களைக் கண்டு மனம் உருகினேன். மக்களோடு மக்களாக இணைந்திருந்திருக்கும் மாபெரும் தலைவர்களால்தான் சீனா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது என்ற எண்ணம் எனக்கு மேலும் வலுப்பட்டுள்ளது. பேளுக்குறிச்சி, க. செந்தில் சீன வானொலியில் 26.01.08 அன்று கேள்வியும் ப‌திலும் நிக‌ழ்ச்சி கேட்டேன். அதில் நேய‌ர்க‌ளின் கேள்விக்கு மீண்டும் ப‌தில் த‌ருவது மிக்க ம‌கிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நிக‌ழ்ச்சியில் ஒரு நேய‌ரின் ஒரு கேள்விக்கு ம‌ட்டும் ப‌தில் த‌ர‌வும். கேள்வியும் ப‌திலும் நிக‌ழ்ச்சியில் நேய‌ர்கள் கேட்கும் கேள்விக‌ளுக்கு ப‌தில் த‌ருவது தான் சிற‌ப்பாக அமையும். சேந்த‌ம‌ங்க‌ல‌ம் எஸ்.எம்.இர‌விச்ச‌ந்திரன்

08.01.07 சீனப் ப‌ண்பாடு நிக‌ழ்ச்சி இன்றைய நிக‌ழ்ச்சியில் சீனார்கள் த‌ங்கள் பெய‌ருடன் குடும்ப பெய‌ரையும் ம‌ற்றும் த‌ங்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட பெய‌ர்க‌ளையும் வைத்து இருக்கிறார்கள். ஒவ்வொருக்கும் இர‌ண்டு சொல் அல்லது 3 சொல் அட‌ங்கிய பெய‌ர்களை வைத்து உள்ளார்கள். பெண்கள் திரும‌ணம் ஆனாலும் த‌ங்கள் குடும்ப பெய‌ர்களை மாற்றுவது இல்லை என்று அறிந்தேன். சீனாவில் உள்ள ஒவ்வொரு சிறுபாண்மை ம‌க்கள் த‌ங்க‌ளுடைய இன‌த்தின் பெயரை த‌ங்க‌ளுடன் சேர்த்து உள்ளார்கள். சீன ம‌க்கள் பெயரை அறிந்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து உள்ள‌து.

…….சென்னை யாழினி, சங்கீதா…… 2008ம் ஆண்டு சீன வசந்த விழா முதல், CHINA NOW என்ற பண்பாட்டு நடவடிக்கை துவங்கவுள்ளது என்று பிரிட்டன் தொழில் மற்றும் வணிகத்துறை லண்டனில் அறிவித்தது குறித்த செய்திகள் பலத் தகவல்களை வழங்கியது. பிரிட்டனின் வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான சீனப் பண்பாட்டு விழா இது என அறியும் போது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வசந்த விழா முதல் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு வரையான 6 திங்களில் பிரிட்டனின் பல்வேறு பிரதேசங்களில் சுமார் 800 நடவடிக்கைகள் நடைபெற உள்ளது குறித்தும் அறிந்தோம்.

……திருப்பூர் இரா.சின்ன‌ப்ப‌ன்…… தங்களின் 13.01.008 காலை ஒலிபரப்பில் இசை நிகழ்ச்சியில்,"தகுந்த இசைப்பயிற்சி எதுவும் எடுத்துக்கொள்ளாமல் ஐந்துவயதுக்கும் குறைவான ஏழு குழந்தைகள் பாடிய சீனநாட்டுப்புற பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டுக்கள். இது யாருமே எதிர்பார்த்திராத ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. மீண்டும் ஒருநாள் ஒலிபரப்பினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.