பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவுக்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் துவக்க மற்றும் நிறைவு விழாவுக்கான பணியகத்தின் தலைவர் zhangheping இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
![]( /mmsource/images/2008/08/06/zhanheping.jpg)
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, பெய்ஜிங் நேரப்படி, ஆகஸ்ட் திங்கள் 8ம் நாளிரவு 8 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய அரங்கான பறவைக் கூடு என்ற தேசிய விளையாட்டரங்கில் துவங்கும். இத்துவக்க விழா, மூன்றரை மணிநேரத்தில் நடைபெறும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செய்தி மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
![]( /mmsource/images/2008/08/06/kaimushizhunbeijiuxu.jpg)
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, அழகான ஒலிம்பிக் என்ற கலைநிகழ்ச்சியோடு துவங்கி, ஒளிமயமான நாகரிகம், பிரமாண்ட சகாப்தம் ஆகிய இரண்டு பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
|