• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 10:11:56    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டர்கள்

cri
இது வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான பல இலட்சம் தொண்டர்கள் அடுத்தடுத்து சேவை புரியத் துவங்கியுள்ளனர். பெய்சிங் Shou Du சர்வதேச விமான நிலையத்தில், தொண்டர்கள் எல்லா இடமும் காணப்படுகின்றனர். அவர்கள் சிவப்பு நிற T-Shirt அணிந்து, வந்து செல்கின்ற பயணிகளுக்கு சிறந்த சேவை புரிக்கின்றனர்.

Gong Chen என்பவர், பெய்சிங் Cheng Shi கல்லூரியின் பிரெஞ்சு மொழி துறையின் மூன்றாவது ஆண்டு கல்வி பயில்கின்றார். மூன்று திங்களுக்கு முன், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டராக மாறி சேவை செய்ய அவர் பெயர் பதிவு செய்தார். பல முறை நடைபெற்ற தேர்வின் மூலம், பெய்சிங் Shou Du சர்வதேச விமான நிலையத்தில் சேவை புரியும் தொண்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு நாடுகளின் பயணிகளின் கேள்விக்கு பதிலளித்து வழிகாட்டுவதோடு, பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின் பயணிகளுக்கு மொழிபெயர்ப்பு சேவையும் வழங்குகின்றார். அவர் கூறியதாவது:
"ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான தொண்டராக சேவை புரிவது, புனிதமானது என்று நினைகின்றேன். தவிர, பெய்சிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறுவது, பல ஆண்டுகளாக அனைவரின் ஆசையாகும். இது, அரிய வாய்ப்பாகும். என்னைப் பொறுத்த வரை, பிரெஞ்சு மொழியை பயிற்சி செய்யும் வாய்ப்பு இதுவாகும்."என்றார், அவர்.

விமான நிலையத்தில் ஒருபோதும் வேலை செய்திராத தொண்டர்களைப் பொறுத்த வரை, விமான நிலையத்தில் தகவல்களை அளிக்கும் பணி, எளிதாக இல்லை. அவர்கள் பயணிகளின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டியிருக்கிறது.
Gong Chen செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், சில பயணிகள் புதிய இடத்துக்கு வந்தவுடன், பதட்ட உணர்வோடு உள்ளனர் என்று கூறினார். பயணிகளின் பதட்ட உணர்வைத் தளர்த்தி, புதிய சூழலுக்கு ஏற்ப தொண்டர்கள் தயார் செய்ய வேண்டும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பல்வேறு நாடுகளின் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், பயணிகள் ஆகியோருக்கு சேவை புரியும் பொருட்டு, Gong Chen போல் வெளிநாட்டு மொழி பேச தெரிந்த தொண்டர்களை பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு குழுவும் Shou Du விமான நிலையமும் அமர்த்தியுள்ளன.

பயணிகள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களுக்கு உதவி செய்வது, தமக்கு மகிழ்ச்சி தருவதாக Gong Chen கூறினார். தமது அன்னிய மொழி தரத்தையும், மக்களுடன் பேசி, பழகும் திறனையும், விமான நிலையத்தில் தொண்டராக சேவை புரியும் இந்த அனுபவம் உயர்த்தும் அதே வேளையில், தமது எதிர்கால வாழ்வில் என்றும் அழியா நினைவாக மாறும் என்று அவர் கூறினார்.
Shou Du சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தில், தொண்டர் ஆடையை அணிந்திருந்த நடுத்தர வயதான பெண் ஒருவர், செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தார். தகவல் அலுவலகத்துக்கும்(information office)விமான நிலைய முனையத்தின் நுழைவாயிலுக்கும் இடையே அடிக்கடி சுறுசுறுப்பாக போய் வந்தார். சில சமயங்களில் பயணிகள் முன்வைத்த பல்வேறு கேள்விகளுக்கு முன்முறுவலோடு பதிலளிக்கின்றார். சில சமயங்களில் ஊனமுற்ற பயணிகளின் முன் சென்று, அவர்களின் பயணப் பெட்டிகளை ஏற்றிச்செல்ல உதவி செய்கிறார். அவர்தான் Li Jian Xin அம்மையார். அவர், விமான நிலைய முனையத்தின் தகவல் அலுவலகத்தின் பணியாளர் ஆவார். 58 வயதான அவர், இரண்டு ஆண்டுகளுக்கு பின், ஓய்வு பெறவுள்ளார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள நேரத்தில்,

விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணி கடினமாக இருக்கும் என அவர் எண்ணினார். எனவே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பங்காற்றும் பொருட்டு, தொண்டராக மாற அவர் பெயர் பதிவு செய்தார். ஓய்வு நேரத்தில், பயணிகளுக்கு சேவை புரிகின்றார். அவர் கூறியதாவது:
"ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, எதிர்காலத்தில், சீனாவை மேலும் வளம் மற்றும் வலிமையோடு நிலவச்செய்யும் என்று கருதுகின்றேன். ஓய்வு பெற்ற பின், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தொண்டராக சேவை புரியும் அனுபவத்தை மீளாய்வு செய்யும் போதெல்லாம், அது மகிழ்ச்சி தரும் என்று கருதுகின்றேன்" என்றார், அவர்.
விமான நிலைய முனையத்தின் தகவல் அலுவலகத்தில் வேலை செய்வதால், விமான நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் செயல்முறை, தகவல்கள், பல்வகை பணிகள் ஆகியவற்றை பற்றி தாம் தெளிவாக அறிந்து கொண்டுள்ளதாக அவர் கூறினார். சில சமயங்களில், பணிகளால் தாம் களைப்படைந்தாலும், மற்றவர்களுக்கு உதவி செய்யும்

போதெல்லாம் ஒருவித இன்பமான உணர்வு தமக்கு ஏற்படுவதாக அவர் கூறினார்.
பெய்சிங் Shou Du சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணி கடந்த ஜுலை திங்கள் முதலாம் நாள் மேற்கொள்ளப்படத் துவங்கியது. செப்டம்பர் திங்கள் 30ஆம் நாள் வரை, சுமார் ஈராயிரத்து 200 தொண்டர்கள், Shou Du சர்வதேச விமான நிலையத்தில் சேவை புரிகின்றனர். அவர்கள் 24 மணி நேர பணி முறையில் சேவை புரிகின்றனர். பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் செய்தியாளர்களுக்கென, பல்வகை செயல்முறைகளை நிறைவேற்றி, மொழிபெயர்ப்பு சேவை வழங்கி, எதிர்பாராமல் ஏற்படும் பல்வகை பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்வார்கள்.