• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-06 10:15:21    
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள பிரென்சு தூதரின் நல்வாழ்த்துக்கள் 1

cri
கடந்த சில ஆண்டுகளில், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனா பன்முகங்களிலும் ஆயத்தம் மேற்கொண்டுள்ளது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள், சீன-பிரான்ஸ் உறவு ஆகிய பிரச்சினைகள் குறித்து சீனாவிலுள்ள பிரென்சு தூதர் சு ஹொய், பெய்சிங்கில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.

7 ஆண்டுகளுக்கு முன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை பெய்சிங் வெற்றிகரமாக பெற்றது முதல், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட துவங்கின. சீனாவிலுள்ள பிரென்சு தூதரான சு ஹொய் இவ்வாயத்தப் பணிகளை தானே கண்டறிந்துள்ளார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் 7 ஆண்டுகள் நீடித்திருந்தன. இப்பணிகளில் திரட்டப்பட்டுள்ள உற்சாகத்தையும் முயற்சியையும் நான் கண்டறிந்துள்ளேன். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடத்தப்படுவதே இதன் முக்கிய நோக்கமாகும். தற்போது, அனைத்து ஆயத்தப்

பணிகளும் செய்து முடிக்கப்பட்டு வெற்றியும் எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் அவர்.
நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் பிரான்ஸ் நெருக்கமாக இணைந்து வருகின்றது. நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கப்படும் Pierre de coubertrn பிரெஞ்சு நாட்டவராவார். 1900 மற்றும் 1924ம் ஆண்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை பாரிஸ் மாநகரம் நடத்தியது. வரலாற்றையும் இப்போதைய நிலையையும் பார்க்கும் போது, பிரான்ஸ் விளையாட்டில் வல்லரசாகும். கடந்த 50ம் ஆண்டுகளுக்கு முன்,

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பிரான்ஸின் சாதனை உலக முன்னணியில் இருந்து வந்த்து. 1900ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்க வரிசையிலான முதலாவது இடத்தை அது பெற்றது. கடந்த 50ம் ஆண்டுகளிலிருந்து 80ம் ஆண்டுகள் வரையான காலத்தில், பிரான்ஸின் விளையாட்டு துறை குறிப்பிட்ட வீழ்ச்சியைப் பெற்ற போதிலும், 1988ம் ஆண்டு சியோல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முதல், பதக்க வரிசையில் முதல் 10 இடத்தில் பிரான்ஸ் மீண்டும் சேர்ந்தது. கடந்த சில ஆண்டுகளில், பிரான்ஸின் விளையாட்டுச் சாதனைகள் அதிகரித்து

வருகின்றன. அட்லாண்டா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இதன் தங்கப் பதக்க எண்ணிக்கை சீனாவை அடுத்து, பதக்க வரிசையில் 5வது இடத்தை பெற்றது. நடைபெற விருக்கும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பிரெஞ்சு நாட்டவர் முழுமையாக முன்னேற்பாடு மேற்கொண்டுள்ளனர். புள்ளிவிபரங்களின் படி, வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 500 பேர் இடம்பெறும் பிரென்சு பிரதிநிதிக் குழுவில் பலர் இவ்வாண்டு வசந்தகாலத்தில் சீனாவுக்கு வந்து, சில ஆயத்தப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். ஒலிம்பிக் திடல்கள் அரங்குகள் மற்றும் அதற்கு அருகிலான சூழல்களை அவர்கள் அறிந்து

கொண்டுள்ளனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவக்குவதற்கு முன்தைய 8ம் நாளில், வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தில் நுழைவார்கள். நீச்சல், வாள்வீச்சு, வள்ள ஓட்டப் பந்தயம் முதலிய போட்டிகளில் பிரென்சு வீர்ர்கள் மேம்பாடு அடைந்திருக்கின்றது. அவர்கள் உயர் நிலை மிக்க சாதனைகளை சீன இரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என்று நம்புகின்றேன் என்றார் அவர்.
பிரென்சு பிரதிநிதிக் குழுவின் சார்பில், ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் சுதந்திரப்பாணி நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம், 800 மீட்டர் சுதந்திரப்பாணி நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம், 100 மீட்டர்

முதுகுப்புறப்பாணி நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் ஆகியவற்றை பெற்ற புகழ் பெற்ற வீராங்கணை மா நு தோ, 2005ம் ஆண்டு உலகக் தடகள போட்டியில் ஆடவர் 110 மீட்டர் தடையோட்ட போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற து க்வு லொய், 6 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கம், 2 வெள்ளி பதக்கம், ஒரு வெண்கல பதக்கம் ஆகியவற்றைப் பெற்ற மிதிவண்டி போட்டி வீரர் லுங் கொய் ஆகியோர் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று சு ஹொய் கூறினார்.