பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ளும் லாவோஸ் அரசுத் தலைவர் choummaly,பிரசில் அரசுத் தலைவர் luiz inacio lula da silva முதலிய அரசியல் தலைவர்களை, சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ இன்று பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.
லாவோஸ் நாடாளுமன்றத்துடனான ஒத்துழைப்பை சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி வலுப்படுத்த விரும்புகிறது என்று வூ பாங்கோ கூறினார். இரு தரப்பின் நட்பார்ந்த பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்து ஆழமாக்க லாவோஸ் விரும்புகிறது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடத்துவதற்கு லாவோஸ் அரசுத் தலைவர் choummaly நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரசில் தரப்புடன் இணைந்து பாடுபட்டு, இரு தரப்பின் நட்பார்ந்த ஒத்துழைப்பை விரிவாக்க சீனா விரும்புகிறது என்று பிரசில் அரசுத் தலைவர் luiz inacio lula da silva ஐச் சந்தித்துரையாடிய போது வூ பாங்கோ தெரிவித்தார்.
|