• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-07 17:00:59    
தேனிலவு நாள் புதையும் நாளானது

cri
தேனிலவு நாள் புதையும் நாளானது

ஒவ்வொருவரும் இம்மண்ணில் ஏதாவதொரு சிறப்புப்பணிக்காக தான் பிறக்கிறார்கள் போலும். சிச்சுவான் மாநிலத்தின் Tongjiang பகுதியின் கிராமப்புற பள்ளியில் பணிபுரிந்த 24 வயதான Guo Xiaocgao மே 14 ஆம் நாள் தனது தேனிலவு பயணத்தை தொடங்க வேண்டியவர். ஆனால் அவருடைய பூதவுடல் அன்று வணக்கம் செலுத்தப்பட்டது. திங்கள் கிழமை பிற்பகல் நிலநடுக்கத்தின் போது அவர் கற்றுக்கொடுக்கும் பள்ளியிலான 158 மாணவர்களும் மதிய ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். இடர்பாட்டை புரிந்து கொண்ட Guo வும் உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் 158 மாணவர்களையும் மிகவும் பழுதடைந்த மூன்றுமாடி பள்ளிக்கட்டிடத்திலிருந்து பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர். Tongjiang பகுதி நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும், மே 12 பிற்பகல் 2.28 மணிக்கு பள்ளிக்கட்டிடம் அசைய தொடங்கியவுடன் Guo Xiaocgao 5 மாணவர்களை மூன்றாவது மாடியிலிருந்து காப்பாற்றி வந்தார். இதர ஆசிரியர்களும் மாணவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். மூன்று நான்கு நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் கட்டிடத்திற்குள் சென்று மூன்று மாணவர்களை காப்பாற்றி வரும் போது இடிந்து விழுந்த சுவரும் அதன் துண்டுகளும் அவர் மேல் விழுந்தன. தள்ளாடியபடி சோர்வுற்ற நிலையிலும் மூன்று மாணவர்களையும் காப்பாற்றிய Guo மருத்துவமனக்கு கொண்டு செல்லும் வழியில் காலமானார். அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கிராமம் முழுவதுமே இறுதிசடங்கில் கலந்து கொண்டது. கணினி அறிவியலை சிறப்புப்பாடமாக கொண்டு Tongjiang ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்வில் முதலிடம் பெற்ற Guo நகரப்பகுதிகளில் பணி செய்ய கிடைத்த வாய்ப்பை புறக்கணித்துவிட்டு அக்கிராமப்பள்ளியில் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்தவர். கைம்பெண்ணாகியுள்ள அவரது மனைவி He Mei யும் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமபுறப் பள்ளியில் தான் ஆசிரியராக பணிபுரிகிறார். இவ்வுலகில் Guo Xiaocgao க்கு கிடைத்த பெரும் வாய்ப்பு 158 மாணவர்களை காப்பாற்றும் சிறப்புப்பணி போலும். தன்னுயிர் தந்து பிறர் நலம் காத்த அவர் தியாகத்திற்கு ஈடு உண்டோ?

விண்ணில் பத்து செயற்கைக்கோள்கள்

எல்லா துறைகளிலுமான ஒருங்கிணைந்த வளர்ச்சி தான் நாட்டின் நிலையான முழு வளர்ச்சியை நிலைநிறுத்தும். தற்போது பல்வேறு வளர்ச்சியடைந்த நாடுகள் கூட வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்களை கொள்ளும்போது, சீனாவின் வளர்ச்சியை கண்டு பல நாடுகளும் வியந்து நிற்கின்றன. இந்நிலையில் Shenzhou 7 விண்கலம் உள்ளிட்ட பத்து செயற்கைக்கோள்களை இவ்வாண்டு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இவைகளில் சுற்றுப்புறச்சூழல், வானிலையை தொடர்புடைய மற்றும் வெனிசுலாவுக்கான தகவல்தொடர்பு செயற்கைக்கோள்கள் உள்ளடக்கம். Shenzhou 7 ஏவப்படும்போது சீன விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து அங்கு சீன விண்வெளி நிலையம் அமைக்க அடிப்படை பணிகளை மேற்கொள்வர். அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் வரலாற்று பதிவை முறியடிக்கும் எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. சந்திரனில் இறங்குவது, விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைப்பது, சந்திரனிலிருந்து மண்ணை எடுத்துவரும் சீனாவின் சந்திர ஆய்விலான மூன்றாவது நிலைக்கான தயாரிப்பு முதலிய பணிகள் இவ்வாண்டுகளில் நடைபெறவுள்ளன. அது தாயாரிக்கும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் 15 ஆண்டுகளுக்கு அதிகமாகவே பயன்படுத்தப்படலாம். இவ்வாறு சீனா தயாரிக்கும் விண்கலன்கள் அதிக நாட்கள் நீடிக்கின்றன என்ற சிறப்பு உள்ளது. இதுவரை Shenzhou விண்கலம் உள்பட 80 விண்வெளிக்கலன்களை சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது.