ஜுலை 25ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் துவங்குவதற்கு முந்தைய 14வது நாளாகும். இப்போட்டிக்கான சீன விளையாட்டுப் பிரதிநிதிக் குழு பெய்ஜிங்கில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் சீன வீரர்களின் எண்ணிக்கையும் அவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் போட்டி வகைகளும் ஒலிம்பிக் வரலாற்றிலேயே மிக அதிகமாகும். இது பற்றி சீனப் பிரதிநிதிக் குழுவின் துணை தலைவர் துவான் ஸ் ச்சியெ கூறியதாவது.
1099 விளையாட்டு வீரர்களால் சீனப் பிரதிநிதி குழு உருவாக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் 28 ஆட்ட போட்டிகளிலும் சாதனை ஈட்ட அவர்கள் பங்கு எடுப்பர். 639 வீரர்களில் நீச்சல் குதிப்பு வீராங்கணை கோ சிங் சிங், துப்பாக்கி சுடுதல் வீரர் தென் ச்சுங் லியாங், கூடை பந்து வீரர் லீ நான் முதலியோர் சீனா சார்பில் அட்லாண்டா, சிட்னி, ஏதென்ஸ் ஆகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். 469 வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பூபந்து போட்டி பல்வேறு தென்கிழக்காசிய நாடுகளின் வீரர்கள் பதக்கம் பெற எதிர்பார்க்கும் போட்டியாகும். இதற்கென இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகள் வலிமைமிக்க வீரர்களை அனுப்பும். இவர்களில் பூபந்து மன்னராக அழைக்கப்படும் இந்தோனேசியாவின் 11 வீரர் வீராங்கணைகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆடவர் மகளிர் கலப்பு போட்டிகளில் கலந்து கொள்வர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக அமெரிக்க ஒலிம்பிக் குழு அண்மையில் வெளியிட்ட பிரதிநிதி குழுவின் பெயர் பட்டியலில் மக்களால் மிகவும் வரவேற்கப்பட்டுள்ள நீச்சல் வீரர் மெகர் பிஃர்புஸ், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8 தங்கப் பதக்கங்களை பெற்று ஒலிம்பிக் வரலாற்றில் சாதனை பொறிப்பதை அவர்தம் இலக்காக கொண்டுள்ளார். பிஃர்புஸ் தனது கனவை நிறைவேற்றினால் புகழ் பெற்ற நீச்சல் வீரர் மாக் ஸ்பிஸ் 1972ம் ஆண்டு மியுனிச் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை ஈட்டிய சாதனையை முறியடிப்பார். அமெரிக்கப் பிரதிநிதிக் குழுவில் மேலும் மக்களின் கவனத்தை ஈர்ப்பது தந்தையும் மகனும், சகோதர சகோதரிகளும் கூட்டாக பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதாகும். புகழ் பெற்ற டென்னிஸ் வீரங்கணைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் இருவரும், ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களான பால் ஹேம் மோர்க்கன் ஹேம், ஜுடோ போட்டியில் லோபஸ் குடும்பத்தினர், வள்ள ஓட்ட பந்தய போட்டியில் வீரர்களான தே அன் அவர்தம் மருமகன் ஆஸ்டின் ஸப்பேரி முதலியோர் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமெரிக்கப் பிரதிநிதி குழுவில் உள்ளனர். இது பற்றி பிரதிநிதிக் குழுத் தலைவர் லீ சி கூறியதாவது
போட்டிக்கான நிகழ்ச்சி நிரலின் படி ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்துள்ளது. அவர்கள் பெய்ஜிங் ஆசிரியர் பல்கலைகழகத்தின் விளையாட்டு அரங்கில் பயற்சியை தொடர்வர் என்றார் அவர்.
ஜெர்மனி 440 விளையாட்டு வீரர்கள் இடம் பெறும் பிரதிநிதி அணியை அனுப்புகிறது. கரைபுரண்டோடும் நீரில் படகோட்ட போட்டி, மகளிர் கால்பந்து, தடகள போட்டிகள், ஜுடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், மேசை பந்து முதலிய போட்டிகளில் ஜெர்மன் வீரர்கள் சாதனை ஈட்டும் திறமை கொண்டுள்ளனர். 2004ம் ஆண்டில் ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 70 கிலோ எடையுள்ள மகளிர் ஜுடோ போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற போஹ்மு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற விரும்புகிறார். இது பற்றி அவர் கூறியதாவது.
இறுதி காலகட்டத்தில் நாங்கள் கவனத்தை விளையாட்டில் வைத்துள்ளோம். என்னை பொறுத்தவரை, விளையாடும் அரசியலும் பிரிக்கப்பட்ட காலணி போல் இருக்கின்ற பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிக அருமையானது. ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பல்வேறு வீரர்களும் வீராங்கணைகளும் அழகான ஒலிம்பிக் கிராமத்தில் குவிந்து தங்கியிருந்தனர். போட்டிக்காக விழிப்புடன் இருப்பது எங்கள் அனைவரின் குறிக்கோளாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் எனது மனம் எண்ணி துடிக்கும் உணர்வை பெறுவதில் வெற்றி கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.
ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் உற்சாகத்துடன் போட்டிக்காக ஆயத்தம் செய்யும் அதேவேளையில் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த ஐக்கிய அரபு நாடுகளில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலான உற்சாகம் அங்கேயுள்ள 40 திகிரி செண்டிகிரெட் தட்புவெப்ப நிலையை தாண்டியது என்றே சொல்ல வேண்டும்.. ஐக்கிய அரபு நாடுகள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு 8 வீரர்களை அனுப்பும். மகளிர் ஜுடோ, இரட்டை திசை பறக்கும் தட்டு சுடுதல் போட்டிகள் முதலியவை அவர்கள் சாதனை ஈட்ட இருக்கும் போட்டிகளாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது ஐக்கிய அரபு நாடுகள் பதக்கம் ஈட்டுவது பற்றி அதன் ஒலிம்பிக் குழுவின் தலைமைச் செயலாளர் அப்துல் அல் மாலிக் கூறியதாவது.
துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் ஈட்டுவது எங்கள் குறிக்கோளாகும். முந்தைய ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இரட்டை திசை பறக்கும் தட்டு சுடுதல் போட்டியில் தங்க பதக்கக் கனவை நிறைவேற்றியுள்ளோம். இந்த பதக்கத்தை ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஈட்டி தந்த வீரர் அகமது அல் மாக்தொம் நடப்பு போட்டியில் மீண்டும் போட்டியிடுகிறார். தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பு எங்களுக்கு அதிகம். தவிரவும் ஜுடோ மற்றும் குதிரையேற்றல் கலை போட்டிகளில் நாங்கள் சாதனை ஈட்ட விரும்புகின்றோம் என்றார் அவர்.
மகிழ்ச்சிகரமான செய்திகளோடு கடந்த வாரத்தில் சில கவலையளித்த செய்திகளும் இருந்தன. காயம் காரணமாக 50 கிலோமீட்டர் ஆடவர் நடப்பு போட்டியில் உலக சாதனை பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நாதன் டியகஸ் ஜுலை 21ம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று அறிவித்தார். மாட்ரிட் அணியில் விளையாடுகின்ற பிரேசில் நாட்டின் கால்பந்து அணியை சேர்ந்த வீரர் ரோபினிகோ நோய் காரணமாக நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வில்லை.
|