• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-07 09:44:08    
பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதையின் ஒலிம்பிக் நெறி

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு, பெய்ஜிங்கில் இன்னும் 3 சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து நெறிகள் திறந்து வைக்கப்படவிருகின்றன. இதில் ஒலிம்பிக்கிற்கான சிறப்பு நெறி குறிப்பிடத்தக்கது. அதன் மொத்த நீளம், 4.5 கிலோமீட்டராகும். பெய்துசெங், ஒலிம்பிக் மையம், ஒலிம்பிக் பூங்கா, காட்டுப் பூங்கா

என நான்கு நிலையங்கள், அதற்கு உள்ளன. விளையாட்டு வீரர்களும் இரசிகர்களும் இந்நெறி மூலம், அருகிலுள்ள விளையாட்டு அரங்குகளுக்கு வசதியாக சென்றடையலாம்.
குறிப்பாக, ஒலிம்பிக் சிறப்பு நெறியின் நிலையங்கள் தனிச்சிறப்புடையவை. எல்லை இடங்களிலும், ஒலிம்பிக் கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. ஒலிம்பிக் மையம் என்னும் சுரங்க இருப்புப்பாதை நிலையத்தை மாதிரியாக கொண்டு, இதனை வரைந்த கட்டிட வ

டிவமைப்பாளர் யே நிங் அம்மையார் கூறியதாவது:
பறவை கூடு என்ற தேசிய விளையாட்டு அரங்கு மற்றும் நீர் கன சதுரம் என்ற நீச்சல் மையத்துக்கு அருகில் ஒலிம்பிக் மையம் என்னும் சுரங்க இருப்புப்பாதை நிலையம் அமைந்துள்ளது. இது, கட்டிட வடிவமைப்பிலான திறனை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக்கின் பல்வேறு விளையாட்டு அரங்குகள், போட்டிகள் நிறைவடைந்த பிறகு, இவை, பொது விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு

பயன்படுத்தப்பட்டு, பொது மக்களுக்கு, மேலும் அதிகமான ஓய்வு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக மாறும். இதனால், பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு பின், இந்த ஒலிம்பிக் சிறப்பு நெறி தொடர்ந்து முக்கிய பங்காற்றும். பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் கவனம் செலுத்திய நகரவாசி சின் சியாங் கூறியதாவது:

இதன் வழியில், பறவை கூடு, நீர் கன சதுரம் முதலிய அரங்குகள் அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் இந்த சிறப்பு நெறி, முக்கியமான போக்குவரத்து கலைப்பு பங்காற்றும் என்றார் அவர்.
இப்பொழுது சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்தில் பாதுகாப்புப் பணி முழுமையாக தொடங்கியுள்ளது. பாதுகாப்பில் பொருட்களை சோதனையிடும் பணியில் ஈடுபட, சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து தொழில் நிறுவனம் சுமார் 3600 பணியாளர்களை அனுப்பியுள்ளது. பெரிய பைகளையும்

திரவங்களையும் கொண்டு செல்லும் பயணிகளை, அவர்கள் முக்கியமாக சோதனை செய்வார்கள். இந்தப் பாதுகாப்பு சோதனை ஒழுங்கினால், போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று நகரவாசி லீ யுவான் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
ஒவ்வொரு நகரவாசிகளும் இதை ஏற்றுக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும். பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதையின் சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய துறைகள் சீராக இருப்பதாக உணர்கின்றேன் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போது, பெய்ஜிங்கின் சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்தின் மூலம், நாள்தோறும் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டுவதாக முன்கூட்டியே மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, பெய்ஜிங், சுரங்க இருப்புப்பாதை போக்குவரத்து ஆற்றலை முழுமையாக உயர்த்தி வருகிறது.