• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-08 15:34:15    
ஹூசிந்தாவுடான சந்திப்பு

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்துகொள்ளும் சில வெளிநாட்டு தலைவர்களை சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் இன்று காலை பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார்.


ஆப்கானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டுக்கும், ஆப்கான் சுய நிர்ணயமாகத் தேர்வு செய்த வளர்ச்சிப் பாதைக்கும் சீனா மதிப்பளிக்கிறது. ஆப்கானின் மறுசீரமைப்புக்கு சீனா இயன்ற அளவில் ஆதரவு அளிக்கிறது என்று ஆப்கான் அரசுத் தலைவர் hamid karzai சந்தித்துரையாடிய போது ஹூசிந்தாவ் தெரிவித்தார். ஆப்கானின் மறுசீரமைப்பில், சீனாவின் உதவிக்கு ஆப்கான் அரசுத் தலைவர் hamid karzai நன்றி தெரிவித்தார்.


அடுத்த ஆண்டு, சீன-ருமேனிய உறவு நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவாகும். இதன் மூலம், இரு தரப்புகளுக்கிடையிலான நட்பார்ந்த ஒத்துழைப்புக் கூட்டாளி உறவு, புதிய காலக்கட்டத்தில் நுழைவதை இரு தரப்பும் முன்னேற்ற வேண்டும் என்று ருமேனிய அரசுத் தலைவர் traian basescu ஐச் சந்தித்த போது ஹூசிந்தாவ் கூறினார்.
இரு நாட்டு மக்களின் நட்புறவை ஆழமாக்கி, இரு நாட்டு நட்பார்ந்த உறவை வலுப்படுத்த ருமேனியா விரும்புகிறது என்று traian basescu தெரிவித்தார்.


சீனாவும், இஸ்ரேலும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு மற்றும் ஆதரவை அளித்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளில் குறிப்பிடத்தக்க பயன்களைப் பெற்றுள்ளன என்று இஸ்ரேல் அரசுத் தலைவர் shimon peres ஐ சந்தித்து பேசிய நடத்திய போது ஹூசிந்தாவ் கூறினார்.


உயர் நிலை தொடர்புகளை வலுப்படுத்தி, பண்பாடு, வேளாண் துறையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை இரு நாடுகளும் விரிவாக்க வேண்டும் என்று shimon peres தெரிவித்தார்.