• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 02:03:32    
பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி எ 

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, உலகிலுள்ள பல்வேறு நாடுகளின் சுமார் 30 ஆயிரம் செய்தியாளர்கள் பெய்சிங் மாநகருக்கு வருவார்கள். பெய்சிங், ஆக்கப்பூர்வமான, வெளிநாடுகளுக்கு திறந்து விடும் மனப்பான்மையுடன், உலகச் செய்தியாளர்களின் வரவை எதிர்பார்க்கின்றது. 2007ஆம் ஆண்டு, "பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் போதும், இதற்காக ஆயத்தம் செய்யும் போதும், வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சீனாவில் பேட்டி காண்பது பற்றிய விதிகளை" சீன அரசு வெளியிட்டது. இவ்விதிகளின் படி, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சீனாவில் பேட்டி காண்பதற்கு நிறைவேற்ற வேண்டிய சில செயல்முறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Fuwa Ni Ni, வசந்தம் மற்றும் மகிழ்ச்சியை மக்களுக்கு தருகின்றது. இது பறந்து செல்லும் போது "உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்" என்ற வாழ்த்து பரவல் செய்யப்படுகின்றது. பல்லாண்டுகால முயற்சிகளின் மூலம், நவீன ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடாக சீனா முதன்முறையாக மாறியுள்ளது. உலக மக்கள், சீனாவுக்கு மிக அருமையான வாழ்த்துக்களை வழங்கியுள்ளனர். சீனாவிலான தான்சானிய தூதர் திரு ஓமல் மப்ரி கூறியதாவது:

"பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெற்றியை நான் எதிர்பார்க்கின்றேன். பெய்ஜிங் வந்தடைந்த பின், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த சீனா மேற்கொண்டுள்ள ஆயத்தப் பணிகளை நேரில் கண்டேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மாபெரும் வெற்றி பெற்று, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக மாறும் என்று உறுதியாக

நம்புகின்றேன்" என்றார், அவர்.
பிரேசில் ஒலிம்பிக் குழுத் தலைவர் திரு நுஸ்மன் இதே வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சீனாவில் வணிகம் செய்யும் ஜெர்மன் நாட்டவர் திரு மெக் ஹெப்த் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு கொண்டுள்ளார். அவர் கூறியதாவது:
"வரலாற்றில் மிகச் சிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா நடத்தவுள்ளது என்று கருதுகின்றேன். அனைத்து ஒலிம்பிக் திடல்களும் அரங்குகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சேவைப் பணிகள் செவ்வனே செய்து முடிக்கப்பட்டுள்ளன" என்றார், அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் இன்றைய துவக்க விழாவுக்கு பின், விளையாட்டுப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். பல்வேறு நாடுகளது விளையாட்டு வீரர்களைப் பொறுத்த வரை, பெய்சிங் ஒலிம்பிக் போட்டியில் தலைசிறந்த சாதனையை பெற வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நைஜீரியாவைச் சேர்ந்த வீராங்கனை கிரேஸ் டானியல், ஒலிம்பிக் பூப்பந்துப் போட்டியில் பங்கெடுப்பது இதுவே முதன்முறையாகும். அவரது போட்டியின் இலக்கு பற்றி குறிப்பிடுகையில், அவர் கூறியதாவது
பெய்சிங் விளையாட்டு அரங்கில், தலைசிறந்த பூப்பந்து விளையாட்டு வீரர்கள் பலர் உள்ளனர். இருந்த போதிலும், நான் என்னால் இயன்றதைச் செய்வேன். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பங்கெடுப்பதென முடிவு செய்ததால், போட்டியில் எனது நிலையை முழுமையாக வெளிக்கொணர்ந்து, ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு பெருமை தேடித் தர பாடுபடுவேன் என்று கிரேஸ் கூறினார்.
ஆஸ்திரேலியாவின் 42வயது படகோட்டப் விளையாட்டு வீரர் ஜேம்ஸ் டாம்கின்ஸ், 6வது முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறார். 3 ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் 9 சாம்பியன் பட்டப் போட்டிகளின் தங்கப் பதக்கங்களை பெற்ற அவர், ஆஸ்திரேலிய வரலாற்றில் மாபெரும் படகோட்டப் போட்டி வீரராக கருதப்படுகிறார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அவருக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாம்கின்ஸ் தெரிவித்தார் அவர் கூறியதாவது

பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்காக, நன்றாக உடற்பயிற்சி செய்ய நான் திட்டமிட்டேன். இது, நீண்டகால திட்டமாகும். படகோட்டப் போட்டி, என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு, மகிழ்ச்சிக்குரிய நிகழ்ச்சியாகவும் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.

29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்க பெய்சிங்கிற்கு மீண்டும் வருவது குறித்து, ஜெர்மன் மகளிர் 7 வகை விளையாட்டுகள் அடங்கிய போட்டியின் வீராங்கனை சோன்யா கெசல்ஸ்லாகர் தனிச்சிறப்பான உணர்வைக் கொண்டார். அவர் மேலும் கூறியதாவது
7 ஆண்டுகளுக்கு முன்பு, பெய்சிங் மாநகரத்துக்கு வந்து உலக பல்கலைக்கழக மாணவர் விளையாட்டுப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். அப்போது, பல்வேறு அமைப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. தற்போது, அமைப்பு, பாதுகாப்பு முதலிய துறைகளில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மேலும் தலைசிறந்ததாகவுள்ளது. இது குறித்து, எனக்கு கவலை ஏதும் இல்லை என்று சோன்யா கூறினார்.
சீன ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டு வீரர் லி ஷியௌபெங் 3 முறை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார். தனது தாய்நாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது குறித்து, அவர் மனக்கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறார். அவர் கூறியதாவது
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். இது, விளையாட்டு வீரர்கள் மற்றும் சீன

மக்கள் அனைவருக்கும் பெருமையான நிகழ்ச்சியாக திகழ்கிறது. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் போது, எனது உயர் நிலையை வெளிக்கொணர பாடுபடுவேன் என்று லி ஷியௌ பிங் கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தமது சாதனையை மேம்படுத்தும் அரங்காக இருக்கிறது. அது மட்டுமல்ல, வேறுபட்ட மக்களின் பண்பாடுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் பரிமாற்றத்தின் பாலமாகவும், அமைதி, நட்பு மற்றும் முன்னேற்றம் என்ற பொது விருப்பத்தை முழு மனித குலம் நாடுவதற்கான அரங்காவும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி திகழ்கிறது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, நீண்டகால வரலாற்று கொண்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கும் சீன நாகரிகத்துக்கும் இடையிலான பெரும் இணைப்பாக அமைகிறது. இது, உலகின் பல்வேறு நாடுகளின் பண்பாட்டுக்கும் சீனப் பண்பாட்டுக்கும் இடையில் உற்சாகத் தழுவலாகவும், மேலை நாகரிகத்துக்கும் கீழை நாகரிகத்துக்கும் இடையிலான உரையாடலாகவும் அமைந்திருக்கிறது. ஓர் உலகம் மற்றும் ஒரு கனவு என்ற பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முழக்கம், இப்போட்டி மீதான சீன மக்களின் எதிர்பார்ப்பை தெரிவிக்கிறது.

இந்த முழக்கம் எமது உளமார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. அதாவது, ஒலிம்பிக் எழுச்சியில், உலகின் பல்வேறு நாடுகளது மக்களுடன் இணைந்து பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டின் வரலாற்றில் புதிய பக்கத்தைத் திறந்து, மனித குலத்தின் மேலும் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்க, சீன மக்கள் விரும்புகின்றனர் என்று ஹு சிந்தாவ் கூறினார்.

இன்று இரவு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நடைபெறுகின்றது. எதிர்வரும் 16 நாட்களில் பெய்சிங்கில், உலகின் 5 கண்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், தலைசிறந்த போட்டிச் சாதனை மூலம் மேலும் விரைவான, உயர்வான மற்றும் வலிமையான என்ற ஒலிம்பிக் எழுச்சியை வெளிப்படுத்துவதோடு, நடைமுறைச் செயல்பாடு மூலம், வெற்றி பெறுவதை விட பங்கெடுப்பு மேலும் முக்கியமானது என்ற ஒலிம்பிக் மையக் கருத்தை விளக்குவார்கள்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புதிய ஒளிவீசும் வரலாற்றை உருவாக்கி, அமைதி, நட்பு, முன்னேற்றம் என்ற புதிய பட்டத்தைத் திறந்து வைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.


1 2