29வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை வரவேற்கும் வகையில், சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவும் அவரது துணைவியார் லியு யுங் ச்சிங் அம்மையாரும், இன்று நண்பகல் மக்கள் மா மண்டபத்தில் விருந்தளித்தனர்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் வழக்கத்தின் படி, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தத்தமது நாடுகளின் ஒலிம்பிக் குழுவின் அழைப்பின் பேரில், துவக்க விழா உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் கலந்து கொள்கின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நடவடிக்கைகளில் 80க்கும் அதிகமான வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வர் என்று தெரிய வருகின்றது.
|