• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 18:53:15    
மிகச்சிறப்பான துவக்க விழா

cri

29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங் நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு பெய்ஜிங்கிலான தேசிய விளையாட்டு அரங்கமான பறவைக்கூடு அரங்கில் துவங்கியது. இன்று காலை செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா மாபெரும் வெற்றி பெற்று, மக்களை மனமுருகச் செய்தது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஆயுட் கால கௌரவத் தலைவர் Antonio Samaranch தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

நேற்று, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் நான் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டேன். இத்துவக்க விழா மாபெரும் வெற்றி பெற்று, எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் வியிப்பையும் தந்தது. சீன மக்களின் நீண்ட கால நண்பர் என்ற முறையில், துவக்க விழா வெற்றி பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். சீன மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிகின்றேன் என்றார் அவர்.

தவிர, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெறுவதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.