• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 19:17:11    
துவக்க விழா பற்றிய ஹாங்காங் மற்றும் தைவான் ஊடகங்களின் கருத்துக்கள்

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நேற்று பெய்சிங்கில் நடைபெற்றது. ஹாங்காங் மற்றும் தைவானின் செய்தி ஊடகங்கள் இன்று வெளியிட்ட கட்டுரைகளில், இவ்விழாவை வெகுவாக பாராட்டின.

ஹாங்காங்கின் Wen Hui ஏடு வெளியிட்ட கட்டுரையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, கீழை நாகரிகத்தின் ஆழந்த உள்ளடக்கங்களை முழுமையாக வெளிப்படுத்தியது. மிகச்சிறந்த கலைநிகழ்ச்சி உலக மக்களின் கவனத்தை ஆழமாக ஈர்த்தது என்று கூறியது.

ஹாங்காங்கின் Da Gong ஏடு வெளியிட்ட கட்டுரையில், உயர் நிலை மற்றும் சீனத் தனிச்சிறப்புடைய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது பற்றிய பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு மற்றும் பெய்சிங் மக்களின் வாக்குறுதியை இந்த மிகச்சிறந்த துவக்க விழா வெளிப்படுத்தியது என்று கருதியது.

தவிர, துவக்க விழாவின் காட்சி மிக அழகானவை. கண்களைக் கொள்ளை கொண்ட பல்வேறு அம்சங்கள் கலைநிகழ்ச்சிகளில் இடம்பெற்றன என்று தைவானின் Zhong guo shi bao ஏடு கூறியது.