உலகின் பரந்துபட்ட கவனத்தை ஈர்த்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. இந்த கம்பீரமான அழகான விழாவை, பல்வேறு நாடுகளது செய்தி ஊடகங்கள் ஒருமனதாக வெகுவாக பாராட்டியதோடு, இந்த விழா சீனாவின் பாரம்பரியப் பண்பாட்டை எழில் மிக்க முறையில் விளக்கி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்ததாகவும் அறிவித்தன.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போடியின் துவக்க விழா, அழகாகவும் சிறப்பாகவும் இருந்தது. இதன் அமைப்புப் பணியாளர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தை பொது மக்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைத்து, உலகின் மக்களிடம் பெரிய வரைபடத்தை காட்டியதாக, பிரான்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.
துவக்க விழா, சீன மக்களுக்கு பெருமை அளிப்பதாக அமைந்தது என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எனும் ஏடு வெளியிட்ட கட்டுரையில் கூறியது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் மாபெரும் கண்கவர் காட்சிகள் கொண்ட துவக்க விழா மூலம், சீனா உலகிடம் வரவேற்பை தெரிவித்தது என்று சான் ஹோயே மெர்குரி எனும் செய்தி ஏடு கூறியது.
2008ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் நாள் இரவு 8 மணிக்கு, பெய்சிங் மாநகரம் பூரணமாக இருந்தது. இத்தகைய மாபெரும் துவக்க விழா உலகில் காணப்படாதது என்று ஆஸ்திரேலியாவின் சிட்னி morning herald எனும் செய்தி ஏடு தனது இணையத்தில் அறிவித்தது.
இந்த துவக்க விழாவை, பெல்ஜிய செய்தி ஊடகங்கள் நேற்று ஆக்கப்பூர்வமாக அறிவித்ததோடு, இதை வெகுவாக பாராட்டியுமுள்ளன. தலைசிறந்த மாபெரும் துவக்க விழா, உலகிற்கு சீனாவின் செழுமையான பாரம்பரியப் பண்பாட்டை விருந்தாக வழங்கியதாக அவை அறிவித்தன.
|