• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 19:25:19    
துவக்க விழா மீதான சர்வதேச செய்தி ஊடகங்களின் பாராட்டு

cri

உலகின் பரந்துபட்ட கவனத்தை ஈர்த்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது. கம்பீரமும் அழகும் நிறைந்த இந்த விழாவை, பல்வேறு நாடுகளது செய்தி ஊடகங்கள் ஒருமனதாக வெகுவாக பாராட்டியதோடு, இந்த விழா சீனாவின் பாரம்பரியப் பண்பாட்டை எழில் மிக்க முறையில் விளக்கி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மீதான மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாகவும் அறிவித்தன.

இந்த துவக்க விழாவை, பெல்ஜிய செய்தி ஊடகங்கள் நேற்று ஆக்கப்பூர்வமாக அறிவித்ததோடு, அதை வெகுவாக பாராட்டியுமுள்ளன. தலைசிறந்த பிரம்மாண்டமான துவக்க விழா, உலகிற்கு சீனாவின் செழுமையான பாரம்பரியப் பண்பாட்டை விருந்தாக வழங்கியதாக அவை அறிவித்தன.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை, இந்தியாவின் செய்தி ஊடகங்கள் நேற்று பன்முகங்களிலும் அறிவித்துள்ளன. பல தொலைக் காட்சி நிலையங்கள் துவக்க விழாவை நேரடி ஒலிபரப்பு செய்தன. கம்பீரமும் அழகும் நிறைந்த இந்த விழா, சீனாவின் ஒளிவீசும் பாரம்பரிய பண்பாடு மற்றும் பண்டைக்கால நாகரிகத்தை முழுமையாக வெளிப்படுத்தியது என்று பல செய்தி ஊடகங்கள் பாராட்டின.

ரஷியா மற்றும் உக்ரைனின் ரஷிய மொழிச் செய்தி ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிட்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா சிறப்பான ஒரு விழாவாகும் என்று அறிவித்தன. மேலும், நாளொரு மேணி பொழுதொரு வண்ணமாய் வரும் போக்கினை, பெய்சிங் மாநகரம் உலகிற்கு எடுத்து காட்டுகிறது என்று அவை குறிப்பிட்டன.

இந்தோனேசியாவின் சர்வேதச நாளேடு இன்று வெளியிட்ட விமர்சனக் கட்டுரையில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக துவங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தது. மேலும், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உலகிற்கு சீனாவின் புதிய புகழ் மற்றும் செல்வாக்கை வெளிப்படுத்தும் என்று இந்த நாளேடு கருத்து தெரிவித்தது. தவிர, ஹாலாந்து,ஸ்பெயின், பிரேசில், செர்பியா, செக், முதலிய நாடுகளின் முக்கிய வானொலி நிலையங்களும் தொலைக் காட்சி நிலையங்களும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை நேரடியாக ஒளிபரப்பின.