• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-09 20:38:35    
ஒலிம்பிக் விளையாட்டப் போட்டியின் பதக்க வரிசை

cri

இன்று மாலை 6 மணி வரை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 4 தங்கம் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 10 மீட்டர் குழல் துப்பாக்கிப் பிரிவு மற்றும் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு பளுத்தூக்கலின் இறுதிப் போட்டிகள் இன்று முற்பகல் முடிவடைந்தன.

செக் நாட்டின் வீராங்கனை Katerina Emmons 503.5 புள்ளிகள் என்ற சாதனையுடன், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முந்தைய பதிவை முறியடித்து, முதலிடம் பெற்றார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 35 வயதான மூத்த வீராங்கனை Lyubov Galkina, வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். கிரோவேஷிய வீராங்கனை Snjezana Pejcic வெண்கலப் பதக்கம் பெற்றார்.

25 வயதான சீன வீராங்கனை சன் சியே சியா மொத்தம் 212 கிலோ சாதனையுடன் சீனப் பிரதிநிதிக் குழுவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன், அவர் பெற்ற சாதனை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முந்தைய பதிவை முறியடித்தது. துருக்கி வீராங்கனை ஒஸ்கன் சிபேல் வெள்ளிப் பதக்கமும், சீன தைபெய் வீராங்கனை சன்வே லிங் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச்சுடுதலில் ஆடவர் 10 மீட்டர் கைத்துப்பாக்கி பிரிவின் இறுதிப் போட்டி, இன்று பிற்பகல் முடிவடைந்தது. சீன வீரர் பங் வெய் 688.2 புள்ளிகள் என்ற சாதனையுடன், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார். தென் கொரிய வீரர் Jin Jong oh வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். வட கொரிய வீரர் KIM Jong Su வெண்கலப் பதக்கம் பெற்றார்.

இன்று நடைபெற்ற ஆடவர் சாலை மிதிவண்டிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் Samuel Sanchez தங்கப் பதக்கத்தை பெற்றார்.