திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு
cri
அடுத்த சில ஆண்டுகளில், உயிரின வாழ்க்கை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், சில இடங்களில் வலுக்கட்டாய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திபெத் அரசு திட்டமிட்டுள்ளது. மரம் வெட்டுதலை தடுப்பது, உயிர் வள எருக்கள் எரியாற்றலைப் பயன்படுத்துவது ஆகியவை இந்த நடவடிக்கைகளில் இடம்பெறும். அடுத்த ஆண்டு முதல், நிங்ச்சி மற்றும் திபெத்தில் தலா 6300 டன் உயிர் வள எருக்கள் மூலமான எரியாற்றலுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ திபெத் தன்னாட்சி பிரதேசம் முடிவு செய்துள்ளது. சோளத்தட்டு, சாதாரண வாழ்க்கை கழிவுப் பொருட்கள் முதலியவற்றால் பதனீடு செய்யப்படும் திட எரியாற்றல் பொருளே உயிர் வள எருக்கள் எரியாற்றல் பொருட்கள் எனப்படுகின்றது. கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட வடமேற்கு திபெத்தில் இந்த வகை எரிபொருட்கள், பயிர்களின் காய்ந்த பதற்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|