Chu Yun Ni Shang என்ற ஒலிம்பிக் ஆடைகள் பண்பாட்டு நடவடிக்கை நேற்று பெய்சிங்கிலுள்ள 798 என்ற கலைத் தொழில் நிறுவனத்தில் நடைபெற்றது. இத்தாலி, ஜெர்மன், ரஷியா, ஸ்பெயின் முதலிய நாடுகளின் சீனாவிலுள்ள தூதர்கள், தொடர்புடைய சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏறக்குறைய ஆயிரம் பேர் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
வரலாற்றில் சீனா, ஆடை பண்பாட்டுத் துறையிலான பெரிய நாடாகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இந்த நடவடிக்கை சீனப் பண்பாட்டின் பரவலுக்கு துணை புரியும் என்று இந்த நடவடிக்கையின் தலைமை ஆலோசகரும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழாக்களுக்கான துணைத் தலைமை இயக்குநருமான Zhang Jigang தெரிவித்தார்.
|