கடந்த சில நாட்களாக, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றி, பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டு, வெகுவாக பாராட்டியுள்ளன.
சிங்கப்பூர் லியன்ஹெசௌபாவ் எனும் செய்தி ஏடு இன்று வெளியிட்ட கட்டுரையில், பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் காட்டிய சீனப் பண்டைக்கால பண்பாடு, மேலை நாடுகளின் பார்வையாளர்களது மனதை நெகிழவைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் பரந்த பொது மக்களும் வெளிநாடுகளில் உள்ள சீனர்களும் இந்த துவக்க விழாவை பாராட்டி, ஊக்கப்படுத்தியுள்ளனர் என்று இந்த செய்தி ஏடு கூறியது.
அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்களும் நேற்று இது தொடர்பாக கட்டுரைகள் வெளியிட்டு பாராட்டின. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றிய தனது ஒளிபரப்பு, அமெரிக்காவில் பரந்த அளவில் பார்க்கப்பட்டது என்று NBC தொலைக்காட்சி குறிப்பிட்டது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை பாராட்டிய போது, சீனாவுக்குரிய இரவில், சீன தனிச்சிறப்பு மற்றும் மாபெரும் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. முழு காட்சிகளிலும் கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்பம், வரலாறு மற்றும் எதிர்காலம் என்ற அம்சங்கள் இடம்பெற்றன என்று பிரான்ஸ் Le Figaro எனும் செய்தி ஏடு தீட்டிய கட்டுரை கூறியது.
உலகின் மக்களிடம் சீனாவின் 5000ஆண்டு வரலாறு, உலகிற்கு சீன மாபெரும் பங்கு, சீன தேசிய இனத்தின் தனித்திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தியது, துவக்க விழாவின் தலைசிறந்த காட்சியாகும் என்று மெக்சிகோ செய்தி நிறுவனம் கூறியது.
தவிர,பிரிட்டன், கியூபா, ஜப்பான், ரஷியா, கசகஸ்தான், ஜெர்மனி, செக், எகிப்து, மொராக்கோ , நைஜீரியா, இத்தாலி முதலிய நாடுகளின் செய்தி ஊடகங்கள் இந்த துவக்க விழாவை உயர்வாக பாராட்டின.
|