• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-10 19:26:20    
பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழா மீதான பாராட்டு-ஆ

cri

கடந்த சில நாட்களாக, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றி, பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டு, வெகுவாக பாராட்டியுள்ளன.

சிங்கப்பூர் லியன்ஹெசௌபாவ் எனும் செய்தி ஏடு இன்று வெளியிட்ட கட்டுரையில், பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் காட்டிய சீனப் பண்டைக்கால பண்பாடு, மேலை நாடுகளின் பார்வையாளர்களது மனதை நெகிழவைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் பரந்த பொது மக்களும் வெளிநாடுகளில் உள்ள சீனர்களும் இந்த துவக்க விழாவை பாராட்டி, ஊக்கப்படுத்தியுள்ளனர் என்று இந்த செய்தி ஏடு கூறியது.

The rising Nepal எனும் நேபாள நாளேடு இன்று தலையங்கத்தை வெளியிட்டு, இந்த துவக்க விழாவை வெகுவாக பாராட்டியது. ஒளிவீசும் துவக்க விழா, சீன மக்களது மாபெரும் வெற்றியாகும். இது மட்டுமல்ல, இது உலக மக்களின் மாபெரும் வெற்றியாகும் என்று இந்த தலையங்கம் குறிப்பிட்டது.

அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்களும் நேற்று இது தொடர்பாக கட்டுரைகள் வெளியிட்டு பாராட்டின. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றிய தனது ஒளிபரப்பு, அமெரிக்காவில் பரந்த அளவில் பார்க்கப்பட்டது என்று NBC தொலைக்காட்சி குறிப்பிட்டது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, உலகிற்கு ஒரு மிக பெரும் கலை நிகழ்ச்சியை வழங்கியது. இது, ஒலிம்பிக் வரலாற்றில் மிக வெற்றிகரமான துவக்க விழாவாகும் என்று பிரிட்டனின் the indepent எனும் செய்தி ஏடு அறிவித்தது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை பாராட்டிய போது, சீனாவுக்குரிய இரவில், சீன தனிச்சிறப்பு மற்றும் மாபெரும் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. முழு காட்சிகளிலும் கலை மற்றும் அறிவியல் தொழில் நுட்பம், வரலாறு மற்றும் எதிர்காலம் என்ற அம்சங்கள் இடம்பெற்றன என்று பிரான்ஸ் Le Figaro எனும் செய்தி ஏடு தீட்டிய கட்டுரை கூறியது.

உலகின் மக்களிடம் சீனாவின் 5000ஆண்டு வரலாறு, உலகிற்கு சீன மாபெரும் பங்கு, சீன தேசிய இனத்தின் தனித்திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தியது, துவக்க விழாவின் தலைசிறந்த காட்சியாகும் என்று மெக்சிகோ செய்தி நிறுவனம் கூறியது.

தவிர, கியூபா, ஜப்பான், ரஷியா, கசகஸ்தான், ஜெர்மனி, செக், எகிப்து, மொராக்கோ , நைஜீரியா, இத்தாலி, ஹங்கேரி, செர்பியா ,போலந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா,வியட்நாம், பிலிப்பைன்ஸ், இலங்கை, அர்ஜென்டீனா முதலிய நாடுகளின் முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த துவக்க விழாவை ஒளிபரப்பியதோடு, இதை உயர்வாக பாராட்டின.