பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2வது நாளில் நுழைந்துள்ளது. 10ம் நாள் பிற்பகல் 5:40 மணி வரை, நீச்சல் மற்றும் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் 9 தங்கம் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல், ஆடவர் 400 மீட்டர் கலப்புப் பாணி நீச்சல், போட்டியின் தங்கப் பதக்கத்தை அமெரிக்க வீரர் Michael Phelps பெற்றார். அத்துடன், புதிய உலக சாதனை பதிவையும் உருவாக்கினார். இதுவே பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முதல் உலக சாதனைபதிவாகும்.
ஆடவர் 400 மீட்டர் சுதந்திரபாணி நீச்சல் போட்டியில், தென் கொரிய வீரர் Park Taehwan தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தென் கொரிய ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் விளையாட்டின் முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். சீன வீரர் சாங் லின் வெள்ளி பதக்கத்தைப் பெற்றார்.
மகளிர் 400 மீட்டர் கலப்புப் பாணி நீச்சல் போட்டியில், ஆஸ்திரேலிய வீராங்கணை Stephanie Rice தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
மகளிர் 400 மீட்டர் சுதந்திரபாணி தொடர் நீச்சல் போட்டியில், Holland அணி தங்கப் பதக்கத்தைப் பெற்றது.
மகளிர் 10 மீட்டர் கைத்துப்பாக்கிப் பிரிவின் இறுதிப் போட்டியில், சீன வீராங்கணை கோ விங் சின் 492.3 புள்ளிகள் என்ற சாதனையுடன், தங்கப்பதக்கத்தை பெற்றார்.
மகளிருக்கான இரட்டையர் 3 மீட்டர் வளை பலகை நீர் குதிப்பு போட்டி இன்று பிற்பகல் முடிவடைந்த்து. சீன வீராங்கணைகள் குவோ சிங் சிங், வூ மின்சியா 343.5 புள்ளிகள் என்ற சாதனையுடன், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன நீர் குதிப்புக் குழு பெற்ற முதலாவது தங்கப்பதக்கம் இதுவாகும்.
இன்று பிற்பகல் முடிவடைந்த மகளிர் 53 கிலோ எடைப் பிரிவு பளுத்தூக்கலின் இறுதிப் போட்டியில், தாய்லாந்து வீராங்கணை பிரபாவதி ஐரேயென்பட்டனதரக்கூன் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
இன்று நடைபெற்ற மகளிர் சாலை மிதிவண்டிப் போட்டியில் பிரிட்டன் வீராங்கணை Nicole Cooke தங்கப் பதக்கத்தை பெற்றார்.
|