• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-11 09:04:45    
பெய்ஜிங் ஒலிம்பிக்கின் ஆயத்தப் பணி மற்றும் துவக்க விழா

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு ஆயத்தப் பணிகளை சீனா செவ்வனே நிறைவேற்றியுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் துவக்க விழா மிகவும் தலைசிறந்தாக அமைந்தது என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் கலந்து கொண்ட சில வெளிநாட்டுத் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர்.


துவக்க விழா மிகவும் அழகாக இருந்தது. மிகவும் தரமான நல்ல நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடர்புடைய நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருந்த அமெரிக்க அரசுத் தலைவர் புஷ், சீன துணை அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கை சந்தித்துரையாடிய போது கூறினார்.


பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா அனைவரையும் மிகவும் கவரக் கூடியதாய் அமைந்தது. அதில் உயர் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சீன மக்கள் காட்டிய உற்சாகம் உலக மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. ஆப்கான் அரசுத் தலைவர் கார்சாய் நேற்று காபூலுக்குத் திரும்பிய பின் இவ்வாறு தெரிவித்தார்.


பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு ஆயத்த பணிகள் நன்றாக மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது ஒலிம்பிக் வரலாற்றில் சிறப்பானதாக பதிவு செய்யப்படும் என்று லாட்வியா, மண்டி நீக்கிரோ, இஸ்ரேல் மற்றும் மியன்மார் அரசுத் தலைவர்கள் மற்றும் ஈரானின் துணை அரசுத் தலைவரும், தேசிய விளையாட்டு நிறுவனத்தின் தலைவருமான Muhammad ali abadi ஆகியோர் தெரிவித்தனர்.