
சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள Shandong மாநிலத்தின் gaomi நகரில், 500 ஆண்டுகாலம் வாய்ந்த சீனாவின் பாரம்பரிய சாம்பல் ஆண்டின் ஓவியம் உள்ளது. சீனாவின் வரலாற்றில், இந்த வகைக் கலை மறுமலர்ச்சியுடன் வளர்ந்தது. தவிர, இது ஒரு முக்கிய வர்த்தகப் பொருளாகும். ஆனால், இந்த வகைக் கலையை மக்கள் அடிக்கடி பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில், பல கலைஞர்கள் முழுமூச்சுடன் பாடுபடுவதன் மூலம், இந்த வகை கலை மீண்டு சுறுசுறுப்பாக வளரத் துவங்கியுள்ளது.

2200 ஆண்டுகால வளர்ச்சியின் முன்னேற்றப் போக்கில், Gaomi நகரம் தலைசிறந்த பண்பாட்டு வரலாற்றை உருவாக்கியுள்ளது. clay sculpture, சீன காகித கத்தரிப்பு, சாம்பல் ஆண்டின் ஓவியம் ஆகிய தனிச்சிறப்பு வாய்ந்த இம்மூன்று கலை வடிவங்கள், இந்நகரில் காணப்படுகின்றன. 2006ம் ஆண்டு, சாம்பல் ஆண்டின் ஓவியம், சீனாவின் முதலாவது தேசிய பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வ பட்டியலில் சேர்க்கப்பட்டது.

ஆண்டின் ஓவியம், சீனாவில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு ஓவிய வடிவங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும், சீனாவின் சந்திர நாட்காட்டு புத்தாண்டின் போது, மங்கலத்தைக் குறிக்கும் பல்வகை ஆண்டின் ஓவியங்களை பொது மக்கள் வாங்கி, வீட்டின் நுழைவாயில் மற்றும் மண்டலத்தில் ஒட்டிக்கொண்டு வருகின்றனர். இதன் மூலம், வாழ்க்கை மீதான நல்ல விருப்பங்களை மக்கள் வைக்கின்றனர். நீண்டகால வளர்ச்சி வரலாற்றில், ஆண்டின் ஓவியம் பல்வேறு பாணிகளை உருவாக்கியுள்ளன. அதேவேளையில், தனிச்சிறப்பு வாய்ந்த தயாரிப்பு முறைகள் மற்றும் கலையின் தனித் தன்மைகள் வளர்ந்து வருகின்றன. Gaomi நகர ஆண்டின் ஓவியம், புகழ் பெற்ற கலை வடிவங்களாக மாறியுள்ளது.

நண்பர்களே, Shandong மாநிலத்தின் ஆண்டின் ஓவியம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.
|