இன்று பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 3ம் நாளாகும். இன்று 13 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. நேற்று 14 தங்கப் பதக்கங்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.
இன்று சீன விளையாட்டு வீரர்கள், பளுதூக்குதல் போட்டி, துப்பாக்கி சுடுதல், நீரில் தலைகீழாக குதித்தல் ஆகிய ஆட்டங்களில் தங்கப் பதக்கங்கள் பெற பாடுபடுவர்.
நேற்றைய ஆட்டங்களில், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தென் கொரியா, செக், தாய்லாந்து, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் வீரர்கள் மற்றும் வீராங்கணைகள், தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.
அவர்களில், சீன வீராங்கணை guo wenjun,guojingjing , wu minxia, xian dongmei,ஆகியோரும், long qingquan என்ற வீரரும் தங்கப் பதக்கங்கள் பெற்றனர். சீன வீரர் Zhanglin, நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.
|