• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-11 11:38:46    
கால்பந்து போட்டியில் கலந்து கொள்ளும் பிரேசில் வீரர் Diego

cri
12 வயதான போது, கால்பந்து உலகின் மன்னராக அழைக்கப்படும் Peleஇன் அணியான Santos அணியில் Diego சேர்ந்தார். Diegoவுக்கு 17 வயதான போது, அவரது துணையுடன், Santos அணி, பிரேசில் தொடர் போட்டியிலான தனது முதல் சாம்பியன் பட்டத்தை பெற்றது. தனது 19வது வயதில், ஐரோப்பிய கால்பந்தாட்ட சாம்பியன் அணியான F.C. Porto அணியில் சேர்ந்தார். தற்போது ஜெர்மன் Bremen அணியைச் சேர்ந்த அவர், அணியில் மிகப் பெரிய செல்வாக்கு வாய்ந்த விளையாட்டு வீரராவார். ஆனால், பயி்ற்சி செய்கின்ற போது, புகழ் பெற்ற நட்சித்திரமான அவர் அனுபவம் அதிகம் பெற்றுவிட்டோம் என்பதாக நடந்துகொள்ள மாட்டார். உணர்வுபூர்வமாக அனைத்து பயிற்சிகளையும் செய்து, பயிற்சியாளரின் ஏற்பாட்டின்படி செயல்படுகின்றனர்.

ஏன் அவர் இப்படி உணர்வுப்பூர்வமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக ஆயத்தம் செய்தார் என்பது பற்றி, Diego கூறியதாவது,

பிரேசிலை பொறுத்தவரை, இப்போட்டி, உலகக் கோப்பை போட்டியை போலவே இருக்கும். ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெறுவது, எங்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. நாங்கள் உணர்வுப்பூர்வமாக ஆயத்தம் செய்கிறோம். இத்தகைய உயர் நிலை போட்டியில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். கடைசியாக நாங்கள் தங்கப் பதக்கத்தை வீட்டுக்குக் கொண்டு செல்ல விரும்புகிறோம்.

Diego கூறியதை போல், பிரேசில் மக்கள், ஒலிம்பிக் கால்பந்தாட்ட தங்கப் பதக்கத்தை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கின்றனர். உலகக் கோப்பை, கடற்கரை உலகக் கோப்பை, மின்னணு கால்பந்து உலகக் கோப்பை முதலிய கால்பந்து சாம்பியன் பட்டங்களை, பிரேசில் கால்பந்து அணி பெற்றுள்ளது. ஆனால், ஒலிம்பிக் சாம்பியன் பட்டம், அவர்கள் இதுவரை பெறாத ஒரே சாம்பியன் பட்டமாகும்.

முன்பு, பரவலாக அறியப்பட்ட பொமாரியோ,ரொனால்டோ முதலிய நட்சத்திரங்கள், ஒலிம்பிக் சாம்பியன்களாக முயற்சி செய்தனர். ஆனால், வெற்றி பெறவில்லை. Diegoஇன் ஒலிம்பிக் பாதை, அவர்களை விட, மேலும் நெளிவு சுழிவாக இருக்கிறது. 2004ம் ஆண்டு, ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பிரேசில் கால்பந்தாட்ட அணி தகுதி பெறவில்லை. தென் அமெரிக்க கண்டத்திலான தேர்வுப் போட்டியில், பிரேசில் தோற்கடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. தோல்வியிலிருந்து Diego பல படிப்பினைகளைப் பெற்றார். இது பற்றி அவர் கூறியதாவது,

நான் அந்த தோலிவியிலிருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன். அவை, உண்மையாக எனக்கு பெரும் உதவி அளித்துள்ளன. துயரமான அனுபவங்கள், எனது மனவுறுதியை வளர்த்தது. புதிய அறைகூவல்களுக்காக நான் மேலும் போதிய அளிவில் ஆயத்தப்படுத்துவேன்.

அர்ஜென்டீன கால்பந்து அணி, இப்போட்டியில் பிரேசிலை எதிர்த்து போட்டியிடும் மிக வலிமையான அணியாகும். எந்த அணியையும் அலட்சியம் செய்ய முடியாது என்று Diego, அவரது அணி தோழர்களிடம் எச்சரிக்கை விடுக்கிறார்.

அர்ஜென்டீனாவும் இத்தாலியும் போட்டியின் சாம்பியன் பட்டத்தை பெறக் கூடும். ஆனால், எதிர்பாராக சில அணிகள் சாம்பியன்களாவதற்கும் வாய்ப்புண்டு. ஆக, ஒரு அணியின் புகழை மட்டுமே கொண்டு அதன் ஆற்றலை மதிப்பிடக் கூடாது. ஒவ்வொரு எதிராளி அணியின் மீதும் கவனம் செலுத்துவோம்.

சீரிய பயிற்சியும் சிறந்த போட்டிச் சூழ்நிலையும், சாதனை பெறுவதற்கான உத்தரவாதமாகும். கால்பந்து போட்டி நடத்தும் Shenyang நகருக்கு சென்ற பின், அங்குள்ள சுற்றுச்சூழலும், ஏற்பாட்டுப் பணியும், Diegoஇன் மனதில் ஆழமாக பதிந்துள்ளன. வேறு 8 நாடுகளிலிருந்து வந்த விளையாட்டு வீரர்களுடன் வாழ்வது, ஒலிம்பிக் கிராமத்தில் வாழ்வது போலவே Diego உணர்ந்தார். அவர் கூறியதாவது,

இங்குள்ள அனைத்தும் நல்லவை. நான் மிகவும் மனநிறைவு அடைகிறேன், மகிழ்கிறேன். பிற நாடுகளின் கால்பந்து அணிகளுடன், சுமூகமான சூழ்நிலையில் வாழ்கிறேன்.

கால்பந்து வீராங்கணைகளுடன் பழகுகின்றாரா என்று Diegoஇடம் கேட்ட போது, அவர் வெட்கத்துடன் சிரித்தார். பிரேசிலின் வீராங்கணைகளுடன் மட்டும் பேசியதாக வெட்கம்பட்டபடி பதிலளித்தார். அவரது உணர்ச்சி வெளிப்பாட்டை கண்டால், புகழ் பல பெற்ற போதிலும், அவர், ஒரு 23 வயது இளைஞரே தான் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.