• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-11 11:41:18    
உயர்வேக கணினி

cri
கவனமாக போ, ஊருக்கு போனவுடன் தபால் போடு எனறு அறிவுரை கூறும் காலம் மலையேறி, போனவுடன் மின்னஞ்சல் அனுப்பு என்று கூறி வழியனுப்பும் வழக்கம் வாடிக்கையாகிவிட்டது. உலகின் எப்பகுதிக்கு செல்லவேண்டுமானாலும் விமானத்திலோ, தொடர் வண்டியிலோ பயணச்சீட்டுகளை கணினி மூலம் பதிவுசெய்து பயணம் செய்யும் வசதி மற்றும் இணைய வலைபின்னலின் வளர்ச்சி நம்மை வியப்படைய வைக்கின்றன. ஏதாவது தலைப்பு அடிப்படையில் கட்டுரைகளோ, படங்களோ தேவையென்றால், தரவுகள் தேடிதரும் தேடல் இணைய பக்கக்கங்களில் உலாவந்தால் மலையளவு புதிய விபரங்களை மணிதுளிகளில் தேடி எடுத்திட முடியும். இன்று பல தொழில் நிறுவனங்களில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டால் கூட ஒழுங்காக வேலைகள் நடைபெறும். ஆனால் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டால் அன்று விடுமுறை போன்று தான்.

நம்முடைய வீடுகளில் பெறப்படுகின்ற இணைய இணைப்புகள் மூலம் வீட்டில் இருந்துகொண்டே உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும், கொண்டாட்டங்களையும் அறிந்து மகிழ்கின்றோம். ஆனால் அனைத்து இணையதளங்களுக்கும் சேவை வழங்கும் மையச் சேவையகம் எப்படி விரைவாக விபரங்களை தேடி தருகிறது? இத்தனை இணைப்புகளுக்கு உரிய தரவுகளை தரவேண்டுமென்றால் அந்த மைய சேவையகம் எத்தகைய மிகப் பெரிய ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்? இந்த தரவுகளை எல்லாம் சேமித்து வைத்து, தேடப்படுகின்றபோது அவற்றை விரைவாக அளிக்கின்ற திறனுக்கு தக்கவாறு மிக வேகமாக, விரைவாக செயல்படக்கூடிய கணினிகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றையே சூப்பர் கம்பூட்டர் எனப்படும் உயர்வேக கணினிகள் என்று அழைக்கிறார்கள். உயிரணுக்களின் மரபணு மூலக்கூறுகளின் முழுமையான தொடர் வரைவு, நிலநடுக்க எச்சரிக்கை தரவுகள், துல்லியமான வானிலை மற்றும் பங்குச் சந்தை பரிமாற்ற தரவுகள் போன்ற சேவைகள் பொதுவாக உயர்வேக கணினிகளை பயன்படுத்தி வழங்கப்படும் பின்னணி சேவைகளுக்கான சில எடுத்துக்காட்டுகள்.

இவ்வாறு மிக பெருமளவான தரவுகளை சேமிக்கவும், அதிக வேலைகளை விரைவாக செய்யவும் பயன்படும் விதத்தில் உருவாக்கப்படும் கணினிகள் தான் சூப்பர் கணினிகள் எனப்படும் உயர்வேக கணினிகள். இவற்றை தயாரிக்கும்போது அதிகமாக செலவாவதால், அவை பாரம்பரிய பெரிய கணினி தொழில் நிறுவனங்களால் மட்டுமே தயாரிக்கப்படும் நிலைமையுள்ளது. இப்படிபட்ட நிலையில் சீனா அத்தகைய அதிவிரைவான நவீன கணினியான சிறப்பு கணினி ஒன்றை உருவாக்கியுள்ளது. சீனாவால் தயாரிக்கப்பட்ட இக்கணினி, கணக்கிடும் முறையில் உலகிலேயே 7 வது உயர்திறன் கொண்டதாக அமைந்திருப்பது தான் இதன் சிறப்பாகும். டானிங் 5000 A (Dawning 5000 A) என்ற அதிவிரைவான இந்த நவீன கணினி வினாடிக்கு 160 டிரில்லியன் கணக்கீட்டு வேகத்தில் இயங்கி நமக்கு தரவுகளை தரவல்லதாக உள்ளது.

ஜெர்மனி Dresden னில் நடைபெற்ற சர்வதேச உயர்வேக கணினி மாநாடு உலகளவில் அதியுயர் திறன் கொண்ட 500 சிறப்பு கணினிகளின் பட்டியலை வெளியிட்டது. அமெரிக்க எரியாற்றல் துறையின் Los Alamos தேசிய ஆய்வகத்தில் இராணுவ பயன்பாடுகளுக்காக, IBM நிறுவனத்தால் அமைக்கப்பட்ட Roadrunner சிறப்புக் கணினி தான் உலகில் முதலிடம் பெற்றுள்ளது. இது ஒரு வினாடிக்கு ஆயிரம் டிரில்லியன் கணக்கீடுகளை செய்யும் திறனுடையது. இது, சீனாவின் டானிங் 5000 A (Dawning 5000 A) யை விட 5.4 மடங்கு வேகமானது. 75 சதுர மீட்டர் அளவு கொண்ட சீனாவால் தயாரிக்கப்ட்ட இந்த சிறப்பு கணினி, வணிக ரீதியான பயன்பாடுகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்டு்ளளது. 36 மணிநேர பெய்ஜிங் உயர்தர வானிலை அறிவிப்பு தகவலை மூன்றே நிமிடத்தில் துல்லியமாக அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. இது ஷாங்காய் சிறப்புக் கணினி மையத்தில் திட்டப்படி வரும் நவம்பர் திங்களில் நிறுவப்படவுள்ளது. பின்னர் உலக உயர்தர சிறப்பு கணினிகளில் ஒன்றாக அது திகழும்.

இதனுடைய ஆற்றல் சேமிப்பு திறன் சிறப்பியல்பாகும். அதாவது டராவ்னிங் 5000 A (Dawning 5000 A) ஒரு மணிநேரத்திற்கு 700 கிலோவாட் மின்னாற்றலை மட்டுமே பயன்படுத்துகிறது. இது IBM நிறுவனத்தின் 500 உயர்ரக கணினிகளை விட ஆற்றல் சேமிப்பில் முன்னணி பெறுகிறது. உயர்ரக 500 சிறப்பு கணினிகளில் 75 விழுக்காட்டிற்கு மேலான மைய முறைவழியாக்க அலகில் இன்டெல் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளபோது டானிங் 5000 A (Dawning 5000 A) யில் 6,600 AMD முறைவழியாக்க அலகுகளே பயன்படுத்தப்படுகின்றன. முன்பு, சீனாவிலே தயாரிக்கப்படும் Godson சில்லுகள் சிறப்பு கணினிகளில் முதன் முதலாக பயன்படுத்தப்படலாம், அதன் மூலம் இன்டெல் மற்றும் AMD நிறுவனங்களின் உயர்வான சந்தை குறையும் என்று ஆய்ந்தறியப்பட்டது. Godson சில்லுகள் சீன அறிவியல் கழகத்தின் டானிங் நிறுவனத்தை கொண்டுள்ள கணினி தொடர்பான கணக்கீட்டு தொழில் நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. தற்போது டானிங் 5000 A (Dawning 5000 A) யில் Godson சில்லுகளை பயன்படுத்தாவிட்டாலும் எதிர்காலத்தில் அவை பயன்படுத்தப்படாது என்று சொல்லுவதிற்கில்லை. டானிங் 5000 L (Dawning 5000 L) என்ற 2010 ஆண்டிற்குள் நிறுவப்படயிருக்கும் புதிய சிறப்பு கணினி Godson சில்லுகள் பயன்படுத்தப்பட்டு தற்போது உலகின் முதல் இடத்தை பிடித்திருக்கும் IBM நிறுவனத்தின் Roadrunner சிறப்பு கணினியை போன்ற திறன் கொண்டதாக அமையவிருக்கிறது.

மிகவும் குறைவான செலவில் அமைக்கப்பட்டுள்ளது அதன் மேலுமொரு சிறப்பு அம்சமாகும். சில விலை உயர்வான AMD சில்லுகளுடன் டானிங் 5000 A (Dawning 5000 A) 200 மில்லியன் யுவான் அதாவது 29 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது IBM Roadrunner சிறப்பு கணினியை விட 100 மில்லியன் அமெரிக்க டாலர் குறைவாகும். குறைந்த செலவில் நிறைந்த பயன்மிக்க சிறப்பு கணினி தான் டானிங் 5000 A (Dawning 5000 A). சீனாவில் தயாரிக்கப்படும் Godson சில்லுகள் பயன்படுத்தப்பட்டால் இதன் செலவு மேலும் பெருமளவு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சீன கணிப்பீடு அறிவியலாளர்கள் 1995 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் சிறப்பு கணினியை உருவாக்கினர். அது அமெரிக்கா அதற்கு முந்தைய 8 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய தரத்தை தான் அடைந்தது. ஆனால் இப்போது சீனா அமெரிக்காவுக்கு மிக நெருக்கமாகவும், ஜப்பான் தனது தளத்தை இழந்துவரும் நிலையில் ஆசியாவில் இரண்டாவதாகவும் உருவாகி வருகிறது. எவ்வளவு தான் வேகமாக தரவுகள் வழங்கப்பட்டாலும் அதை விட அதிவேக எதிர்பார்ப்புகள் தான் அதிகமாகி வருகின்றன. இது தொடர்பான ஆய்வுகள் உலகிற்கு நன்மை பயக்கும் என்று நம்புவோம்.