• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-11 10:07:11    
நியுசிலாந்து தூதரின் பேட்டி

cri

சீனாவிலுள்ள நியுசிலாந்து தூதர் டோனி புரோனிக்கு, விளையாட்டு நிகழ்ச்சிகள் என்றால் மிகவும் பிடிக்கிறது. அனைத்து நியுசிலாந்து மக்களை போல, விளையாட்டுப் போட்டியில் நியுசிலாந்தின் பாரம்பரியமும் அவருக்கு பிடிக்கிறது.
சர்வதேசத்தன்மை வாய்ந்த கூடைப்பந்து, கால்பந்து ரக்பி, உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் துவங்குவதற்கு முன், நியுசிலாநத் வீர்ர்கள் அடிக்கடி மெளலி போர் நடனங்களை ஆடினார்கள். பெய்ஜிங் ஒலிம்பிக்கை முன்னிட்டு, நியுசிலாந்து மக்கள் பேரூக்க உணர்வைக் கொண்டுள்ளனர். தூதர் டோனி புரோனி கூறியதாவது:
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், உலகளவில் மிக வலுமையான விளையாட்டு வீரர்களுடன் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவது என்பது, நியுசிலாந்து மக்கள் ஒலிம்பிக்கை விரும்பியதற்கு முக்கிய காரணமாகும் என்றார் அவர்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வது, நியுசிலாந்து மக்கள் பலரின் கனவாகும். இவ்வாண்டு ஆக்ஸ்ட் திங்கள், 320 வீரர்கள் அடங்கிய நியுசிலந்தின் பிரதிநிதிக்குழு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் என்று தூதர் டோனி புரோனி கூறினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் முதல் முறையாக பெய்ஜிங் வந்தார். அப்போதைய பெய்ஜிங் இப்போது இருந்ததை விட முழுமையாக வேறுபட்டிருந்தது. அவர் கூறியதாவது:
அப்பொழுது, பெய்ஜிங்கின் மக்கள் தொகை, 55 இலட்சமாகும். பெய்ஜிங் உணவு விடுதி, பெய்ஜிங் மாநகரில் மிக உயரமான கட்டிடமாகும். பாதையில், தனியார் வாகனம் ஏதுமிருக்காது என்றார் அவர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தூதராக பதவி ஏற்ற போது, பெய்ஜிங் வேகமான வளர்ச்சி காலத்தில் நுழைந்திருந்தது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி்ககான அரங்கங்களின் கட்டுமானத்தில், பெய்ஜிங்கின் வேகத்தைக் காணலாம் என்று அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:
விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானம் மாபெரும் திட்டப்பணியாகும். அனைத்து கட்டுமான திட்டப்பணிகளும் ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு முந்தைய சில திங்களில் சீராக முடிவடைந்துள்ளன. தேசிய அரங்கான பறவைக்கூடு மற்றும் தேசிய நீச்சல் மையமான நீர் கன சதுரம் இதில் குறிப்பிடத்தக்கவை. அவை, சர்வதேச அளவில் குறிப்பிடப்படும் தன்மை வாய்ந்த கட்டிடங்களாக மாறியுள்ளன என்றார் அவர்.
பெரிய ரக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மூலம், பல நலன்களைக் கொண்டு வர முடியும் என்று தூதர் டோனி புரோனி தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம், விளையாட்டுக்கான

பொது மக்களின் பேரூக்கத்தைத் தொடர்ந்து அதிகரிக்க செய்யலாம். அப்பொழுது, பல செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதோடு, வீரர்களிடம் பேட்டி காணும். இவ்வாறு நாட்டுகளைப் பற்றி அதிகமாக அறிந்து புரிந்து கொள்வதை வலுப்படுத்துவதற்கு, விளையாட்டுகள் துணைபுரியும் என்றார் அவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக்கும், இப்படிபட்டதே. உலகளவில் சிறப்பான போட்டிகளை நடத்துவதை தவிர, அந்த ஒலிம்பிக் கட்டிடங்கள், ஒலிம்பிக்கிற்குப் பிந்திய காலத்தில், மக்கள் அனைவருக்கும் விளையாட்டு மற்றும் உடல் பயிற்சியில் பங்காற்றும் என்று டோனி புரோனி கூறினார்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்புக்கு, பெய்ஜிங் செய்துள்ள ஏற்பாட்டுப் பணிகளைக் குறிப்பிடுகையில், இது, விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாட்டுக்கான முக்கிய அறைகூவலாகும் என்று தூதர் டோனி புரோனி தெரிவித்தார். ஆனால், விளையாட்டு நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கக்கூடிய ரசிகர்கள், விளையாட்டுப் போட்டிகள் கொண்டு

வரும் மகிழ்ச்சியை மேலும் நன்றாக அனுபவிக்கும் வகையில், அனைத்து ஏற்பாட்டுப் பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நான், ஒரு பொது பார்வையாளராக சிறப்பான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைப் பார்த்து செல்ல விரும்புகின்றேன். உலகளவில் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவதைக் கண்டுகளிக்க வேண்டும். பார்த்து மிகவும் மகிழ்ச்சியலாம் என்றார் அவர்.