• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-11 16:30:42    
பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழா மீதான பாராட்டு-இ

cri

கடந்த சில நாட்களாக, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா பற்றி, பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டு, வெகுவாக பாராட்டியுள்ளன.


அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்களும் நேற்று இது தொடர்பாக கட்டுரைகள் வெளியிட்டு பாராட்டின. கம்பீரமும் அழகும் நிறைந்த பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழாவை பாராட்டியதோடு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் எழுச்சியை முழுமையாக காட்டுகிறது என்று அவை வெகுவாக பாராட்டின. பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழாவில், தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளின் மூலம் சீனாவின் வரலாற்றுப் பண்பாடும் நவீன நாகரிகமும் இணைந்து வெளிப்படுத்தப்பட்டன என்று USA TODAY எனும் செய்தி ஏடு 9ம் நாள் அறிவித்தது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, மேலை மற்றும் கீழை நாடுகளின் ஒன்றிணைப்பு, உலகின் பல்வேறு நாடுகளின் பரந்துபட்ட பங்கெடுப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது என்பது ஒலிம்பிக் எழுச்சியின் உண்மையான காட்சியாகும் என்று டைம்ஸ் எனும் வார இதழ் வெளியிட்ட கட்டுரையில் குறிப்பிட்டது.


பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதன் மூலம், தனதுவளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் ஆற்றலை வெளிக்காட்டியதோடு, சர்வதேசச் சமூகத்தில் தன் தகுநிலைமையும் சீனா உயர்த்தியுள்ளது. யேமனின் politikenஎன்ற செய்தி ஏடு 9ம் நாள்  வெளியிட்ட கட்டுரையில் இவ்வாறு கூறியது. தவிர, அரசியல் செய்தி ஏடு, குடியரசு செய்தி ஏடு, புரட்சி செய்தி ஏடு முதலிய செய்தி ஊடகங்கள் பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழாவை உயர்வாக பாராட்டின.

உகாண்டாவில் New vision, monitor ஆகிய இரு முக்கிய செய்தி ஏடுகள் வெளியிட்ட கட்டுரையில், பெய்சிங் ஒலிம்பிக் துவக்க விழா பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து, சீனாவின் நீண்டகால பண்டைக்கால வரலாறு மற்றும் நவீன புகழை வெளிப்படுத்துகிறது என்று கூறப்பட்டது.