• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 10:47:32    
சீன இரசிகர்களின் நன்நடத்தை

cri
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கியது முதல், சீன இரசிகர்கள் மாபெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சீன-அமெரிக்க கூடைப்பந்துப் போட்டியில், சீன இரசிகர்கள் இரு தரப்பையும் உற்சாகத்துடன் ஊக்கப்படுத்தி, சிறந்த நன்நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அமெரிக்காவின் The Washington Post நானேடு நேற்று வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்தது.

சீன அணியின் யௌ மிங் மூன்று புள்ளிகள் பெறும் இலக்கை வெற்றிகரமாக இட்ட போது, சீன இரசிகர்கள், மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்தனர். அமெரிக்க அணியின் Kobe Bryant இலக்கு வளையத்தில் தொங்கி வெற்றி புள்ளிகளைப் பெற்ற போதும், அவர்கள் கைதட்டிப் பாராட்டினர். இரு தரப்பையும் நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். சீனா அமெரிக்காவை வரவேற்பதே அதற்குக் காரணமாகும் என்று சீன பெண் இரசிகர் ஒருவர் கூறியதாக இக்கட்டுரை தெரிவித்தது.

சீனாவின் இரசிகர்கள் ஊட்டுகின்ற உற்சாகம், சீன விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதல்ல. சீன விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளாத சில போட்டிகளிலும், அவர்கள் ஆரவாரம் செய்து ஊக்கமூட்டியுள்ளனர். அவர்கள் நன்நடத்தையுடன் கைதட்டிப் பாராட்டினர் என்றும் கட்டுரை சுட்டிக்காட்டியது.