• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 11:02:06    
தா சுயே கோயில் (ஆ)

cri

புத்த தூபியின் பின்புறத்தில், தா பெய் தான் என்ற பலிபீடம் இருக்கிறது. அது, கோயில் திருமறை வைக்கப்படும் இடமாகும்.

தா பேய் தானின் பின்புறத்தில் மூன்றாவது முற்றம் இருக்கிறது. அங்கு, வூ லியாங் ஷோ மண்டபம் அமைந்துள்ளது. அதற்கு முன், மேடை ஒன்று காணப்படுகிறது. அது, வெள்ளிக் கல் தடுப்பு சுவரால், கட்டப்பட்டுள்ளது. அதில் புத்தர் சிலை ஒன்றும் போதி புத்தர் சிலை இராண்டும் காணப்படுகின்றன. சேற்றால் செய்யப்பட்டவை. அவை தங்கமுலாம் பூசப்பட்டவை.

தா சியோங் மண்டபம், முழு கோயிலின் மையப் பகுதியாகும். அதற்கு முன், வெள்ளிக் கல் தடுப்பு சுவரால் கட்டப்பட்ட ஒரு மேடை இருக்கிறது. இம்மேடையின் ஆதரவுடன், அம்மண்டபம், மேலும் கம்பீரமாகத் தோன்றுகிறது.

முக்கிய வாயிலின் இரு பக்கங்களிலும், எட்டு வடிவில் சுவர்கள் இருக்கின்றன. அதன் பின்புறத்தில் முதலாவது முற்றமும் முற்றத்தின் நடுவில், செங்கோன வடிவிலான Gong De குளமும் உள்ளது. அதன் நடுவில் ஒரு கற் பாலம் போடப்பட்டுள்ளது. குளத்தின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் கல்லில் செதுக்கப்பட்ட நீர் மிருகங்களை காணலாம். அவற்றின் வாயிலிலிருந்து நீர் பாய்ந்து குளத்திற்கு வருகிறது. இந்த இரண்டு நீர் மிருகங்களும், லியௌ வம்சகாலத்தில் கட்டியமைக்கப்பட்டன. குளத்தில் மலர்கின்ற தாமரை மலர்கள் அதனை அழகுற செய்கின்றன.