• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 12:14:31    
முன்னாள் சோவியத் யூனியனின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் Alexandr Dityatin

cri
நான் இரண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அவை, 1976ம் ஆண்டு montreal மற்றும் 1980ம் ஆண்டு மாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளாகும். அவற்றில், 3 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தைப் பெற்றேன்.

நீங்கள் கேட்டது, ஒரே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8 பதக்கங்களைப் பெற்ற முன்னாள் சோவியத் யூனியனின் புகழ்பெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர் Alexandr Dityatin செய்து கொண்ட தன் அறிமுகமாகும். அவரது இந்த தலைசிறந்த சாதனை, 28 ஆண்டுகளுக்கு முந்திய 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெறப்பட்டது.

அரங்கில் 3 நிமிடங்கள், அதற்கு முன், பத்து ஆண்டு பயிற்சிகள் தேவை என்று சீனப் பழமொழி ஒன்று கூறப்படுகிறது. தலைசிறந்த சாதனைகளைப் பெற்ற Dityatinகைப் பொறுத்த வரை, அவர் இதற்கு விதிவிலக்கு அல்ல. அவர் 1966ம் ஆண்டு, தனது 9 வயதில், தன்னுடைய ஜிம்னாஸ்டிக்ஸ் வாழ்க்கையைத் துவங்கினார். பயிற்சி வாழ்க்கையை நினைவு கூர்ந்த போது, அவர் தெரிவித்ததாவது,

ஜிம்னாஸ்டிக்ஸ் கற்றுக் கொண்ட பிற குழந்தைகளை போன்று, நாள்தோறும், நான் 2 மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும். பயிற்சி நிலையின் உயர்வுடன், நான் நாள்தோறும் பயிற்சி செய்யும் நேரம் 3 மணி நேரமாக மாறியது என்றார் அவர்.

நேரம் விரைவாகக் கடந்தோடி விட்டது. 7 ஆண்டுகால கடுமையான பயிற்சியின் மூலம், 1973ம் ஆண்டில், 16 வயதுடைய அவர், முள்ளாள் சோவியத் யூனியனின் இளைஞர் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் முதலிடம் பெற்றார். அதற்குப் பின், அதிகம் அறியப்படாத அவர், புதிய விளையாட்டு நட்சத்திரமாக மாறினார்.

1975ம் ஆண்டில், எதிர்பாராதவாறு அவர் முன்னாள் சோவியத் யூனியனின் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் முதலிடம் பெற்ற பின், நாட்டு அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976ம் ஆண்டு கனடா montreal ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அவர், முன்னாள் சோவியத் யூனியனுக்கு ஆடவர் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுப் போட்டிக்கான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார். அத்துடன், வளையத்தில் தொங்கி வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். அப்பொழுது முதல், அவர் தனது விளையாட்டு இலட்சியத்திலான மிக உயர்வான காலத்தில் நுழைந்தார். அவற்றை நினைவு கூறும் போது, அவர் பசுமரத்தில் ஆணி அறைந்தால் போல, கூறியதாவது,

அப்போது, நான் உலகில் மிக வலிமையானவராக உணர்ந்தேன். ஆனால், போட்டியில் ஆச்சரியமும் ஏற்படலாம். மன வருத்தமும் ஏற்படலாம். எனவே, நான் முழு மூச்சுடன் போட்டிக்குத் தயாரித்து, மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றேன் என்றார் அவர்.

1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, அவர் முன்னாள் சோவியத் யூனியனின் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரதிநிதிக் குழுவின் முன்னணி நபரானார். அவரது தலைமையில், முன்னாள் சோவியத் அணி, ஆடவர் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுப் போட்டியில் முதலிடம் பெற்றது. மேலும், தனிநபர் பன்முகப் போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அதற்குப் பின், உயிராற்றல் மிக்க அவர் மேலும் வெற்றிக் கொள்ளப்பட முடியாத நபரானார். 1980ம ஆண்டு ஜூலை 25ம் நாள், 6 பதக்கங்களைப் பெற்றார். அவர், ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 8 பதக்கங்களைப் பெற்ற ஒரே ஒரு விளையாட்டு வீரர் ஆவார். அதே வேளையில், எகிறிகுதித்தல் போட்டியில் அவரது தலைசிறந்த வெளிப்பாடு, அவரை ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 10 மதிப்பெண் பெற்ற முதல் ஆடவர் விளையாட்டு வீரராக மாற்றியது.

மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், காயங்களால் ஏற்பட்ட தொந்தரவால், அவர் படிப்படியாக மக்களது கவனத்திலிருந்து விலகத் தொடங்கினார். அவர் ஓய்வு பெற்ற பின், தனது சொந்த ஊரான லெனின்கிராடுக்கு திரும்பி, ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால், 2008ம் ஆண்டு ஏப்ரல் 5ம் நாள், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற போது, நேற்றைய புகழ்பெற்ற விளையாட்டு வீரரான அவர், மீண்டும் கவனத்துக்குரிய நபரானார். பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய போது, அவர் தன்னடக்கத்துடன் கூறியதாவது,

ஒலிம்பிக் தீபம் ஏந்தும் நபராக மாறியதை, நான் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். கலந்து கொண்டோர்கள் பலரில் ஒருவராக இருந்த போதிலும், இதை பெரு மதிப்பாக உணர்ந்தேன் என்றார் அவர்.

ரஷிய ஜிம்னாஸ்டிக்ஸ் துறையில் முன்னோடியாக, அவர் ரஷிய மற்றும் உலக ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் மிக தீவிரமாக இருக்கும் என்று அவர் கருதுகின்றார். அதே வேளையில், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும். விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை நன்றாக வெளிக்கொணர்ந்து, உலக சாதனைகளை அதிகமாக உருவாக்க வேண்டும். இவ்வொலிம்பிக் விளையாட்டுப் போட்டியை, மிக உயர் நிலை மாபெரும் விளையாட்டு விழாவாக மாற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.