• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-13 12:00:30    
ஹாங் சோ நகரவாசிகள் புதிய மருத்துவ காப்புறுதி கொள்கை

cri
ஹாங் சோ நகரில் அரசு சாரா கூட்டு நிறுவனம் ஒன்றில் பணி புரியும் லியு சியேன் சிங், ச்சியாங் சி மாநிலத்தைச் சேர்ந்தவராவார். 2006ம் ஆண்டு, அவர் யுரேமிய எனப்புடம் முற்றிய நிலையிலான சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. உயிரைக் காப்பாற்ற, வாரத்துக்கு 2 முறை அவர் இரத்தத்திலான அசுத்தங்களை அகற்றும் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. அத்தகைய சிகிச்சை கட்டணம் திங்களுக்கு குறைந்தது 6000 யுவான் ஆகும். ஆனால், லியு சியேன் சிங் தம்பதியரின் திங்கள் வருமானம் 3000 யுவான் மட்டுமே. அதிஷ்டவசமாக, அவ்வாண்டு ஹாங் சோ நகரில் ஒரு புதிய கொள்கை நடைமுறைக்கு வந்தது. அதன் படி, லியு சியேன் சிங் திங்களுக்கு சுமார் 100 யுவான் கட்டணம் செலுத்தினால், ஹாங் சோ நகரவாசிக்கு சமமான நோய்க்கான மருத்துவ காப்புறுதியை அனுபவிக்கலாம். காப்பீட்டில் கலந்து கொள்வதற்கு வேண்டிய கட்டணத்தைத் தனிநபர், அவர் பணி புரியும் கூட்டு நிறுவனம், அரசு ஆகிய 3 தரப்புகள் ஏற்று கொள்ளும். லியு சியேன் சிங் கூறியதாவது

மருத்துவ காப்புறுதி இல்லாத நிலையில், இத்தகைய சிகிச்சையை எப்படி செய்ய வேண்டும் என்று ஒன்றும் தெரியாது. மருத்துவக் காப்புறுதி இல்லாதிருந்தால், இந்த மருத்துவ சிகிச்சை பெற இயலாது என்றார் அவர்.

தற்போது, லியு சியேன் சிங் இன்னும் பொருளாதார சிக்கலை எதிர்நோக்குகின்றார். ஆனால், மருத்துவ காப்புறுதியின் ஆதரவோடு நோயை எதிர்கொள்ளும் துணிவு அவருக்கு ஏற்பட்டுள்ளது. அவருடைய தாய் அவருக்கு ஒரு மாங்காயீரலை கொடுக்க முடிவு செய்துள்ளார். ஏற்பு சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஈரல் மாற்று சிகிச்சை, அதற்கு பிந்திய மருந்து சிகிச்சை ஆகியவற்றுக்கான கட்டணமும் மருத்துவ காப்புறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.

2001ம் ஆண்டு, ஹாங் சோ நகரில் நகர பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அமைப்புமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. நகரிலுள்ள நிர்வாக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்கள் அனைவரும் காப்புறுதிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் 2007ம் ஆண்டுக்கு முன், லியு சியே சிங் போன்ற வெளியூரிலிருந்து வந்தவர்களும் அவர்களுடைய குழந்தைகளும், ஒரு பகுதி முதியோரும் இந்த மருத்துவ காப்புறுதியில் சேர்க்கப்படவில்லை. சிலர் மருத்துவ கட்டணத்தால் அல்லலுற்றனர்.

இவ்வாண்டு 71 வயதாகும் ZHAO CAI YUN, 20 ஆண்டுகளுக்கு முன், கணவனுடன் லியோ நிங் மாநிலத்திலிருந்து ஓய்வு பெற்ற பின், ஹாங் சோ நகருக்கு குடியேறினார். அவருடைய கணவன் ஹாங் சோ நகரவாசிக்கான மருத்துவ காப்பீட்டு முறையில் சேர்க்கப்பட்டார். ஆனால், ZHAO CAI YUN முன்பு பணி புரிந்த தொழில் நிறுவனம் லியோ நிங் மாநிலத்தில் உள்ளது. தற்போது, இந்த தொழில் நிறுவனம் மூடப்பட்டது. ஆகையால், கடந்த 20 ஆண்டுக்கான மருத்துவ சிகிச்சை கட்டணத்தை அவரே சொந்தமாக செலுத்த வேண்டியிருந்தது. நீண்டகாலமாக பித்தப்பை பாதிப்பால் நோய்வாய்பட்டுள்ள அவர், மருத்துவமனைக்கு போக விரும்பவில்லை. அவர் கூறியதாவது

10ஆண்டுகளுக்கு மேலாக பித்தப்பை பாதிப்பால் அல்லல்பட்டேன். மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நோய் நிலைமையை கட்டுப்படுத்தினேன். இந்த முறை மிகவும் வலி அடைந்தேன். மருத்துவமனைக்கு போக வேண்டியுள்ளது. கடும் நோய்க்கான காப்பீட்டு அமைப்புமுறையிலிருந்து இப்போது பயன் பெறலாம் என்றார் அவர்.

அவர் குறிப்பிட்ட அமைப்புமுறை, 2007ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் நாள் நடைமுறைக்கு வந்த முதியோருக்கான கடும் நோய் மருத்துவ சிகிச்சை காப்பீட்டு பற்றிய விதிகள் தான்.

இவ்விதிகளின் படி, மருத்துவமனையில் செலுத்த வேண்டிய மொத்தம் 24 ஆயிரம் யுவான் கட்டணத்தில், ZHAO CAI YUN காப்பீட்டிலிருந்து 9 ஆயிரம் யுவான் திரும்ப பெறலாம். இத்தகைய மருத்துவ காப்புறுதி அமைப்புமுறை பொது மக்களுக்கு உண்மையாகவே பயன் தந்துள்ளது. ZHAO CAI YUN இன் கணவர் கூறியதாவது

இதனால், அதிக பயன் பெற்றுள்ளோம். இந்த அமைப்புமுறை இல்லை என்றால், 9 ஆயிரம் யுவான் திரும்ப பெற முடியாது. முழுவதும் சொந்த செலவாக இருந்தால், எங்களைப் பொருத்த வரை பெரும் சுமையாகும் என்றார் அவர்.

2001ம் ஆண்டு ஹாங் சோ நகரின் மருத்துவ காப்புறுதி அமைப்புமுறை படிப்படியாக மேம்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டில், இது பற்றிய பல சலுகை கொள்கைகள் வெளியிடப்பட்டன. சப்டெம்பர் முதல் நாள் கடும் நோயால் மருத்துவமனையில் சேர வேண்டிய குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீட்டு முறை நடைமுறைப்படுத்தப்படத் துவங்கியது. ஒட்டுமொத்த மருத்துவ காப்புறுதியில் சேர்க்கப்படாத சுமார் 3 இலட்சம் குழந்தைகள் அனைவரும் காப்பீட்டு அமைப்புமுறைக்குள் சேர்க்கப்பட்டனர். ஹாங் சோ நகர் மருத்துவ காப்புறுதி மையத்தின் தலைவர் CHEN ZHENG XIANG கூறியதாவது

முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீட்டு விதிகள் வெளியிடப்பட்ட பின், ஹாங் சோ நகரில் வாழும் அல்லது பணி புரியும் அனைவரும் மருத்துவ காப்புறுதி அமைப்புமுறையில் சேர்க்கப்பட்டனர் என்றார் அவர்.

மக்கள் அனைவரையும் சமூக வளர்ச்சியின் கனியை அனுபவிக்க செய்வதற்கான முக்கிய காலடி இந்த சலுகைகள் ஆகும் என்று சே ச்சியாங் மாநில சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியர் YANG JIAN XIN கருதுகின்றார். அவர் கூறியதாவது,

தரமான வாழ்க்கை நிலை வாய்ந்த நகரை உருவாக்கும் ஹாங் சோ நகராட்சியின் அடிப்படை கருத்தை இது காட்டுகின்றது. அதாவது வளர்ச்சியின் கனிகளை மக்கள் அனைவரையும் அனுபவிக்க செய்வதோடு மக்களை வளர்ச்சியுறவும் செய்கின்றது. பொது மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சினையைத் தீர்ப்பது தான், அரசின் மிக முக்கிய கடமையாகும் என்றார் அவர்.

அனைவரையும் மருத்துவ காப்புறுதியை அனுப்பவிக்க செய்ய, கிராமப்புற மற்றும் நகர சமூகக் காப்புறுதி ஒருமைப்பாட்டை நனவாக்க ஹாங் சோ நகராட்சி திட்டமிட துவங்கியுள்ளது என்று தெரிய வருகின்றது.