• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 09:39:57    
நேயர்களின் கருத்துக்கள்

cri
கலை: தமிழ்ப்பிரிவின் 45வது ஆண்டு நிறைவுக்காக மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவை மூலம் வாழ்த்து கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும் முதலில் எமது நன்றிகளை கூறிக்கொள்கிறோம். உங்களது தொடரும் ஆதரவில் மேலும் பல சாதனைகளை படைக்க தமிழ்ப்பிரிவின் பணியாளர்கள் காத்திருக்கின்றனர்.
....பல நேயர்களின் வாழ்த்து குரல்.........

இனி கடிதங்களின் மூலம் தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம்.
க்ளீட்டஸ்: மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் சீனாவில் நெகிழிப்பை பயன்பாடு பற்றிய கட்டுப்பாடு குறுத்து அறிந்தேன். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கூடைகள் மற்றும் துணிப்பைகளைக் கொண்டு நாம் பொருட்களை வாங்கச்சென்றது கண்முன் வருகிறது. இலவச நெகிழிப்பைகளுக்கு விதிக்கப்பட்ட தடை உலகிற்கு எடுத்துக்காட்டக அமைந்த நடவடிக்கையாகும்.
கலை: தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி குறித்து, இலங்கை காத்தான்குடி எம். ஒய். எஃப் ஹனா எழுதிய கடிதம். சீன வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு சீன மொழியை கற்று வருகிறேன். என் சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன், சீன மொழியில் கற்றுக்கொண்டதை பேசி மகிழ்கிறேன்.

இதனால் சீன மொழி கற்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
க்ளீட்டஸ்: நாமகிரிப்பேட்டை கவித்துளி சக்தீஸ்வரன் எழுதிய கடிதம்.
வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியில் 1951 ஆம் ஆண்டு திபெத் விடுதலை மற்றும் உள்மங்கோலியா தொடர்பான பல அரிய தகவல்களை தெரிந்துகொண்டேன். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் புல்வெளி பால்சூப் பற்றிய குறிப்பு அருமை.
கலை: கினிகத்தேனை எம். பி. மூர்த்தி தொலைநகல் மூலம் அனுப்பிய கடிதம். ஆகஸ்ட் திங்கள் முதல் நாளில் 45வது ஆண்டின் நிறைவை கொண்டாடி, 46வது ஆண்டில் காலடி வைத்துள்ள சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு நேயர் மன்றங்கள் மற்றும் அனைத்து நேயர்களின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள். தமிழ்ப்பிரிவின் பணி மேலும் பல்லாண்டுகள் தொடர்ந்து சிறப்புற இறைமன்றாடுகிறேன்.
க்ளீட்டஸ்: கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். ஒலிம்பிக் தொடர்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஒலிம்பிக்கும், அரசியலும் வெவ்வேறானவை, சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அனைத்து நாடுகளும் ஆதரவளிக்கவேண்டும் என்று ஐ. நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். வசிஷ்டர் வாயால் நற்சான்றிதழ் பெற்றது போன்ற இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்

சூலைத் திங்கள் 24 ஆம் நாள் இடம்பெற்ற •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில், •ஒலிம்பிக்கிற்கான பெய்ஜிங் மாநகரத்தின் போக்குவரத்து உத்தரவாதப் பணி• என்ற கட்டுரையைக் கேட்டேன். போக்குவரத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையிலும், மாசுபாட்டினைக் குறைக்கும் வகையிலும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதற்கேற்ப சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பெய்ஜிங் மாநகர அரசுக்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக உருவாக்கப்படும் போக்குவரத்து நெறிகள் யாவும், பெய்ஜிங்கின் நிரந்தர நலனுக்கு உதவட்டும்.
திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன்
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போதான தலைசிறந்த கலை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டேன். சாதாரண நிகழ்வுகளுக்கே சீனர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்..
உலக விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கிற்கு, பெய்ஜிங் நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? இரவு பகலாக வரும் வெளிநாட்டவரை மனமகிழச்செய்யும் சீனக் கலைநிகழ்ச்சிகள், உறங்குவதற்கு கூட செல்ல விருப்பமில்லாமல் மூழ்கிவிடச்செய்யும். கலைகளுக்கு பெயர் எடுத்த சீனக் கலை நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் கண்டுகளிக்க நல்லதொரு பெரிய வாய்ப்பு இது.

ஊட்டி, S.K.சுரேந்திரன்
ஜூலை 15 அன்று செய்தியில், பெய்சிங்கின் பசுமைமயமாக்க பரப்பின் வீதம் 2000 ஆண்டின் 36 விழுக்காட்டிலிருந்து தற்போது 43 விழுக்காடாக அதிகரித்துள்ளதை அறிந்தேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்காக பெய்சிங் விண்ணபித்த போது அளித்த வாக்குறுதியை பெய்சிங் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது மாசுபாடற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மனித முதன்மையில் ஊன்றி நின்று ஆக்கப்பணியை செவ்வனே வலுப்படுத்தி வருவதும் அனைவராலும் பாராட்டப் படவேண்டியதே.
காளியப்பம்பாளையம், க ராகம் பழனியப்பன்
ஒலிம்பிக் செய்தியில் ஜூலை 27 அன்று, கியூபாவிலிருந்து அதிக வீரர்கள் கலந்துகொள்கின்றனர் என்றும் இந்தியாவில் இருந்து 40 வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் அறிந்து கொண்டேன். இரு நாட்டு வீரர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

......சர்வதேச தமிழ்ப்பணி மன்றம் பொன்.ஏழிசை வல்லபி......
ஜூலை 19 அன்றைய •பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள்• பகுதியை செவிமடுத்தேன். வழமையாக ஏதேனும் ஒரு தகவலை மையப்படுத்தி அமைவது போல் அல்லாது, பல்வேறு தகவல்களை இன்று அறிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக, பறவைக் கூடு பற்றிய தகவல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக, ஏராளமான தகவல்களை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக காத்திருக்கின்றேன்.
......பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்.......
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மானுட வள ஒலிம்பிக் என்னும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள சீன அரசின் கருத்து மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. சீனாவின் பண்டைய பண்பாட்டின் மைய அம்சத்துடன் மானுட வள ஒலிம்பிக் நெருக்கமாக இணைவது மட்டுமல்லாமல், உலகிற்கு, இணக்கம், பரிமாற்றம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்த ஒலிம்பிக் வாய்ப்பாக அமையும் என்பது என் நம்பிக்கை.

திருப்பூர், இரா. சின்னப்பன்
சீன வானொலியின் இணைய தளத்தில் தற்போது 2008 ஒலிம்பிக் பற்றிய செய்திகளும், நிழற்படங்களும் பார்ப்பதற்கு பரவசமாக உள்ளன. "உலகம் ஒரு பறவைக்கூடு! அதை பெய்சிங் ஒலிம்பிக்கில் காண்பது கண்கூடு!!! இதுவே என் வாழ்த்து.
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
சீன வனொலி தமிழ்ப்பிரிவு 29வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியினை முன்னிட்டு நாள்தோறும் வழங்கி வரும் ஒலிம்பிக் சிறப்பு நிகழ்ச்சியினை கேட்டு வருகின்றேன். பெய்ஜிங் ஒலிம்பிக் இதுவரை கண்டிராத நவீன அறிவியல் தொழில்நுட்ப ஒலிம்பிக் போட்டியாக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஒலிம்பிக்போட்டி வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
…..முனுகப்பட்டு.பி.கண்ணன்சேகர்……
அறிவியல் தொழில் நுட்பம் மிகுந்த பெய்ஜிங் ஒலிம்பிக்" என்ற செய்தி தொகுப்பு கேட்டேன். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை அதிகமாக அறிவியல் தொழில் நுட்பத்தை புகுத்திய ஒலிம்பிக் போட்டி, பெய்ஜிங் நகரில் நடக்கும் விளையாட்டு போட்டிதான் என்பதை அறிந்து வியப்படைந்தேன்.
ஊத்தங்கரை, கவி.செங்குட்டுவன்

ஜூலை 25 ஆம் நாள் இடம் பெற்ற செய்தியாளர்களை வரவேற்கும் ஒலிம்பிக் ஊடக கிராமம் எனும் செய்தித் தொகுப்பு கேட்டேன். அதில் ஒலிம்பிக் போட்டியைக் காண வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்குவதற்காக சீன அரசால் நிர்மானிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகம் எனும் செய்தியாளர் கிராமம் பற்றி அறிந்தேன். அத்தோடு தங்கும் அறைகளில் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் அறிந்த போது மிகவும் வியப்பாக இருந்தது. சர்வதேச செய்தியாளர்கள் மீதான சீனாவின் அக்கறை மற்றும் விருந்தோம்பல் பண்பு ஆகியவற்றை இது வெளிப்படுத்துகிறது.
......வளவனூர் முத்துசிவக்குமரன்......
29வது ஒலிம்பிக் போட்டி பெய்ஜிங் மாநகர, சீன மற்றும் உலக விழாவாகும். உலகின் 10000 விளையாட்டு வீரர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செய்தியாளர்களும் பங்கு கொள்ளவிருக்கும் இந்த மாபெரும் திருவிழா வெற்றியடைய சீன அரசு, சீன மக்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் வருகின்ற விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, வரலாற்றில் என்றென்றும் அழியாப்பதிவுகளை ஏற்படுத்துவார்கள் எனபது உறுதி.