• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-08-12 18:33:49    
பெய்ஜிங் ஒலிம்பிக்கின் நான்காவது நாள்

cri

இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நான்காவது நாளாகும். பெய்ஜிங் நேரப்படி, பிற்பகல் 6 மணி வரை, ஜிம்னாஸ்டிகஸ் எனப்படும் சீருடற்பயிற்சி, நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், வள்ள ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளில் பத்துக்கு மேலான தங்கப் பதங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று காலை, ஆடவர் குழு ஜிம்னாஸ்டிகஸ் எனப்படும் சீருடற்பயிற்சி இறுதிப் போட்டியில் சீன அணி, 286.125 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது.

அமெரிக்க நீச்சல் வீரர் Michael Phelps 200 மீட்டர் ஆடவர் சுதந்திர பாணி நீச்சல் போட்டியில், புதிய உலக சாதனை பதிவுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலிய நீச்சல் வீரங்கனை Leisel Jones 100 மீட்டர் மகளிர் கவிழ்ந்த பாணி நீச்சல் போட்டியில், தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

100 மீட்டர் ஆடவர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டியில், அமெரிக்க நீச்சல் வீரர் Aaron Peirsol பதக்கம் வென்று, உலக சாதனையை முறியடித்தார்.

100 மீட்டர் மகளிர் மல்லாந்த பாணி நீச்சல் போட்டியில், அமெரிக்க நீச்சர் வீராங்கனை Natalie Coughlin தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

துப்பாக்கி சுடுதலின் 50 மீட்டர் ஆடவர் கை துப்பாக்கி பிரிவில், தென் கொரிய வீரர் Jin Jong Oh, தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

மகளிர் 10 மீட்டர் மேடை ஒத்தியக்க நீர்குதிப்புப் போட்டியில், சீன வீராங்கனைகள், Wang Xin மற்றும் Chen Ruolin முதலிடம் பெற்றனர்.

ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இரட்டை பறக்கும் இலக்குப் பிரிவில் அமெரிக்க வீரர் Walto Eller தங்கப்பதக்கம் பெற்றார்.

63 கிலோ எடைப் பிரிவு மகளிர் பளுதூக்குதலில் வட கொரிய வீராங்கனை PAK Hyon Sukதங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

ஆடவர் கரைபுரண்டோடும் நீரில் வள்ள ஓட்டத்தில், ஸ்லோவாக்கிய வீரர் Michal Martikan தங்கப்பதக்கம் பெற்றார்.

ஆடவர் சிறுவள்ள ஓட்டத்தில் ஜெர்மனி விளையாட்டு வீரர் Alexander Grimm தங்கப்பதக்கம் பெற்றார்.

55 கிலோ எடைக்கு குறைவான ஆடவர் கிரேக்க ரோமானிய பாணி மற்போர் போட்டியில் ரஷிய விளையாட்டு வீரர் Nazyr Mankiev தங்கப்பதக்கம் பெற்றார்.