இன்று, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 5வது நாளாகும். 17 தங்கப் பதக்கங்களுக்கான போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.
சீருடற்பயிற்சி, நீரில் தலைகீழாக குதித்தல், பளுத்தூக்குதல், துப்பாக்கிச் சுடுதல் முதலிய இன்றைய போட்டிகளில் சீனாவின் பிரதிநிதிக் குழு தங்கப் பதக்கங்களைப் பெறப் பாடுபடும்.
இன்று, 200 மீட்டர் மகளிர் சுதந்திர பாணி நீச்சல், 200 மீட்டர் ஆடவர் வண்ணத்துபூச்சி பாணி நீச்சல் உள்ளிட்ட நீச்சல் போட்டிகளும், மகளிர் குழு சீருடற்பயிற்சிம், மிதிவண்டி, வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதித்தல், துப்பாக்கிச்சுடுதல் பளுத்தூக்குதல், யுடோ, மற் போர், வாள் சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன.
|