ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை அறிவிக்கும் இந்திய செய்தியாளர்கள், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தகவல் சேவை மற்றும் உபசரிப்புப் பணி குறித்து மன நிறைவு தெரிவித்தனர். dainik bhaskar செய்தியேடு உள்ளிட்ட மூன்று செய்தியேடுகளின் சிறப்பு எழுத்தாளர் suresh kumar dixit நேற்று சீன வானொலி நிலையத்தின் ஹிந்தி மொழில் பிரிவிற்கு வந்த போது இவ்வாறு தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய பின், மாபெரும் துவக்க விழா, தலைசிறந்த விளையாட்டரங்குகள், வசதியான போக்குவரத்து ஆகியவை, அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளன என்று suresh kumar dixit கூறினார்.பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான முக்கியமான செய்தி மையத்தின் சேவை குறித்து suresh kumar dixit மன நிறைவு தெரிவித்தார்.
தமது கருத்துக்கள் மூலம், அழகான பெய்ஜிங் மாநகரம், தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் சீனாவின் பண்பாடுகளை இந்திய மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
|